
ஆர்.கே.நாயகனாக நடிக்க, ஷாஜி கைலாஸ் இயக்கும் படம் படம் 'வைகை எக்ஸ்பிரஸ்'. இவர்கள் இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. இதில் நீதுசந்திரா பிரதான நாயகியாக நடிக்கிறார். இனியா, கோமல் சர்மா, சுஜா வாருணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
நடிப்பில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எதையும் செய்யத் துணிந்தவரான ஆர்கே. இந்த படத்தில் சண்டைக் காட்சிகளில் பயங்கர ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.
இதற்காக நியூயார்க் அருகில் க்ரீன்பாயிண்ட், ப்ருக்லீன் என்ற இடத்தில் இருக்கும் ஹாலிவுட் ஸ்டண்ட் புரொபஷனல் மையத்துக்கு சென்று 15 நாட்கள் பயிற்சி எடுத்துள்ளார். பாப் கார்ட்டர் என்பவரிடம் சேசிங் காட்சிக்காகச் சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார் .
படத்தின் பிரதான வில்லனாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி நடிக்கிறார். குழந்தைகள் பூங்கா ஒன்றில் அவர் செய்யும் நாசகரமான அழிவைத் தடுக்கும் காட்சியில் சதியை தடுத்து நிறுத்த மோதிப் போராடும் காட்சியில் சண்டைக் காட்சியில் ஆர்.கே சாகசம் காட்டியுள்ளார்.
இந்த க்ளைமாக்ஸ் காட்சிகளை சண்டை இயக்குநர் கனல் கண்ணன் காட்சிகள் அமைக்க 13 நாட்கள் எடுத்துள்ளனர். இதில் ஃபாண்டம் கேமரா, ஹெலிகேம்கள் தவிர ஆறு கேமராக்கள் படப்பிடிப்பு நடந்த 13 நாட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Post your comment