பெப்சி தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் - ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு

Bookmark and Share

பெப்சி தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் - ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு

திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

திரைப்பட தொழிலாளர்களுக்கு (பெப்சி) சென்னையை அடுத்த பையனூரில் அரசு 65 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. இதில் 15 ஏக்கரில் புதிதாக ஸ்டூடியோ கட்டப்பட்டு உள்ளது. ரூ.6 கோடி செலவில் இந்தியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக இது கட்டப்பட்டு இருக்கிறது. ஒரே நேரத்தில் 6 படங்களின் படப்பிடிப்புகளை இங்கே நடத்த முடியும்.

இந்த ஸ்டூடியோவுக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த ஸ்டூடியோவை ஜூலை மாதம் திறந்து வைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.

அங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகளும் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக 6 ஏக்கரில் 640 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியையும் முதல்-அமைச்சர் தொடங்கிவைக்கிறார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தை, பெப்சியில் அடகு வைத்துவிட்டது போல பாரதிராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், பெப்சிக்கும் நல்லுறவு நிலவுகிறது. இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.


Post your comment





Related News
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
விஜய்க்கு அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக தான் அப்படி சொன்னேன், பிரபல கட்சி பிரமுகர்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
சிம்புவை உதறி தள்ளிய அன்புமணி
சர்கார் படத்தின் அதிரடி முடிவுக்கு பின்னால்! ரசிகர்களை கொண்டாடவைக்கும் விசயம்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விஜய்யே வேண்டாம் என்று முடிவு எடுத்தும் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா?
மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை! ரசிகர்கள் வேதனை
இன்று விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?
உலகளவில் அடித்து நொறுக்கிய வசூல்! விசயம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions