புதிய களத்தில் தடம்பதிக்கும் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம்

Bookmark and Share

புதிய களத்தில் தடம்பதிக்கும் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம்

சலீம் மற்றும் தர்மதுரை உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம். இந்நிறுவனம், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை விநியோகமும் செய்துள்ளது.

ஆர்.கே.சுரேஷ் தன்னை தயாரிப்பாளராக மட்டுமில்லாமல், நடிகராகவும் கோலிவுட்டில் தனது பெயரை நிலைநிறுத்தியுள்ளார். இந்நிலையில், ஸ்டுடியோ 9 மியூசிக் என்ற மியூசிக் நிறுவனத்தை ஆர்.கே.சுரேஷ் தொடங்கியுள்ளார். இதன்மூலம் தரமான இசைப் பாடல்களை வெளியிடுவது எனவும் முடிவு செய்துள்ளார்.

இந்நிறுவனத்தின் சார்பில் முதன்முதலாக ‘அட்டு’ எனும் படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளார். வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை அருமையாக படம்பிடித்துள்ள அட்டு படத்தை ரத்தன் லிங்கா என்பவர் இயக்கியிருக்கிறார்.

விருவிருப்பாகவும், அனைத்து விதமான ரசிகர்களை கவரும்படி இப்படம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இசை மற்றும் வெளியீட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Post your comment





Related News
பெப்சி அமைப்புக்கு தலைவரானார் ஆர்.கே.செல்வமணி
நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான்: பாவனா கார் டிரைவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்
கீர்த்தி சுரேஷ் அம்மாவையும் கடத்த முயன்ற பாவனா கார் டிரைவர்- அதிர்ச்சி தகவல்
'சிரிக்க விடலாமா'வைச் சிந்திக்க விடலாமாவாக்கிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!
மாஸ் காட்டிய விஜய், கீர்த்தி சுரேஷ் ! மீண்டும் சாதனை
கீர்த்தி கேரவனுக்குள் போனால் ஏன் வெளியே வர அவ்ளோ நேரமாகுது?
நான் இல்ல 'இ அம்மாயி' தான்: கீர்த்தி சுரேஷ் மீது பழிபோடும் ஹீரோ நானி
முதல் படத்தோடு சரக்கு தீர்ந்த இயக்குநர்கள்!
பைரவா கேரளா வசூல் நிலவரம் முழுவதும்- ரூ 10 கோடி கிளப்பில் இணைந்ததா?
என் கணவர் இப்படி இருக்க வேண்டும், இப்படியெல்லாம் இருக்க கூடாது- கீர்த்தியின் 3 கண்டிஷன்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions