ஆர்.கேவை வைத்து ஷாஜி கைலாஷ் இயக்குவது சுரேஷ்கோபி பட ரீமேக் தானா..?

Bookmark and Share

ஆர்.கேவை வைத்து ஷாஜி கைலாஷ் இயக்குவது சுரேஷ்கோபி பட ரீமேக் தானா..?

எல்லாம் அவன் செயல், என் வழி தனி வழி படங்களை தொடர்ந்து இப்போது மூன்றாவது முறையாக வைகை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் ஷாஜி கைலாஷ், ஆர்கே இருவரும் மீண்டும் இணைந்திருக்கின்றனர்.   இதிலும் ஆர்கே போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி படத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது.  

கதாநாயகியாக நீத்து சந்திரா நடிக்கிறார். அதுவும் இரட்டை வேடங்களில்.. கூடவே இனியா, சுஜா வாருணி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.  பொதுவாக ஆர்.கேவுக்கு பொருந்தும்படியாக பிறமொழிகளில் இருந்து கதைகளை வாங்கித்தான் ஷாஜி கைலாஷ் ரீமேக் பண்ணிவருகிறார். மலையாளத்தில் தான் இயக்கிய சிந்தாமணி கொலகேஸ் படத்தை தான் எல்லாம் அவன் செயல் ஆகவும், இந்தியில் வெளியான ஆப் தக சப்பன் படத்தை  என் வழி தனி வழி யாகவும் மாற்றிய ஷாஜி கைலாஷ்,

இப்போது வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்காக ரீமேக் செய்ய இருப்பது மலையாளத்தில் வெளியான நாதியா கொல்லப்பட்ட ராத்திரி படத்தை தான். ஆனால் இதை இயக்கியது ஷாஜி கைலாஷ் இல்லை.. இயக்குனர் மது இயக்கிய படம் தான் இது.இந்தப்படத்தில் முக்கால்வாசி கதை ட்ரெய்னிலேயே படமாக்கப்பட்டிருக்கும். ட்ரெய்னில் நடைபெற்ற கொலைகளை கண்டுபிடிக்க வரும் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் சுரேஷ்கோபி.

ஹீரோயின் காவ்யா மாதவன் இரு வேடங்களில் நடித்திருப்பார். இவர்களது இரட்டை வேடத்தில் தான் கதையின் டிவிஸ்ட்டே ஒளிந்திருக்கும்.  ஷாஜி கைலாஷ் வைகை எக்ஸ்பிரஸ் பட பூஜையின் போது சொன்ன விஷயங்கள் மேற்கூறிய படத்திற்கு தான் கச்சிதமாக பொருந்துகின்றன. அது உண்மையென்றால், தமிழ் ரசிகர்களே.. ஒரு விறுவிறுப்பான இன்வெஸ்டிகேஷன் த்ரில்லருக்கு இப்போதே தயாராகுங்கள்.. 


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
உங்க பொண்டாட்டி ட்விட்டரில் இல்லைனு இப்படி செய்யலாமா? - பிரியாவால் சிக்கிய பிரபலம்.!
நீயா நானா கோபி நாத்தின் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா?
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
நிஷா படிப்பிற்கு பணம் கொடுக்கும் விஷயத்தில் கோபிநாத் பெயரில் மோசடி? உருக்கமான கடிதம்
'அவருக்கு மட்டன் பிடிக்கும். ஆனா, நான் சமைச்சாதானே..!' - நீயா நானா' கோபிநாத் மனைவி துர்கா கலகல
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க.வில் இணைந்தார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions