முழுநீள காமெடியனாகும் ரோபோ சங்கர்!

Bookmark and Share

முழுநீள காமெடியனாகும் ரோபோ சங்கர்!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடியனாக வலம்வந்து கொண்டிருந்த ரோபோ சங்கரை, வாய் மூடி பேசவும் படத்தில் காமெடியனாக்கினார் டைரக்டர் பாலாஜி மோகன். அதையடுத்து தற்போது தனுஷை வைத்து தான் இயக்கி வரும் மாரி படத்திலும் ரோபோ சங்கரையே மெயின் காமெடியனாக்கியிருக்கிறார் அவர்.

இந்த நிலையில், ரொம்ப நல்லவன்டா நீ படத்திலும் முழுநீள காமெடியனாக நடித்திருக்கிறார் ரோபோ சங்கர். அதே படத்தில் இமான் அண்ணாச்சியும் இருந்தும் அவரை காமெடி போலீசாக்கி விட்டு, ரோபோ சங்கரையே மெயின் காமெடியனாக்கியிருக்கிறார் அப்பட டைரக்டர் ஏ.வெங்கடேஷ்.

இதுபற்றி ரோபோ சங்கர் கூறுகையில்,

இந்த படத்தில் நான் நடித்துள்ள காமெடி காட்சிகள் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. அதோடு என்னையும் வேறு தளத்துக்கு இப்படம் கொண்டு செல்லும். இதற்கு முன்பு பலமுறை நான் டைரக்டர் வெங்கடேஷிடம் சான்ஸ் கேட்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம் கூப்பிடுகிறேன் என்பார் ஆனால் கூப்பிடவே மாட்டார். ஆனால் இந்த முறை நான் கேட்காமல் அவராகவே என்னை கூப்பிட்டு இந்த சான்சை கொடுத்தார்.

அதோடு எனக்கு நிறைய பஞ்ச் டயலாக்கும் உள்ளது. இந்த டயலாக்குகள் காலேஜ் பசங்க மத்திய்ல பெரிய அளவில் ரீச்சாகி விடும் அந்த அளவுக்கு இளவட்டங்களை மனதில் கொண்டு காமெடி காட்சிகளையும், வசனங்களையும் வைத்திருக்கிறார் என்று கூறிய ரோபோ சங்கர், இந்த படத்தில் எனக்கான கேரக்டரின் மீது நான் அதிகமாக ஈர்க்கப்பட்டதின் விளைவாக ஒரு உதவி இயக்குனர் போலவும் பணியாற்றியிருக்கிறேன் என்கிறார்.


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions