ரோபோ ஷங்கருக்கு சிபாரிசு செய்யும் டைரக்டர்கள்!

Bookmark and Share

ரோபோ ஷங்கருக்கு சிபாரிசு செய்யும் டைரக்டர்கள்!

சரத்குமார் நடித்த சண்டமாருதம் படத்தை அடுத்து ஏ.வெங்கடேஷ் இயக்கிய படம் ரொம்ப நல்லவன்டா நீ. இந்த படத்தில் மிர்ச்சி செந்தில் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதி பாலா உள்பட பலர் நடித்த அப்படத்தில் ரோபோ ஷங்கர் முக்கிய காமெடியனாக நடித்திருந்தார்.

அதற்கு முன்புவரை தனது படங்களில் வேறு காமெடியன்களை பயன்படுத்தி வந்த வெங்கடேஷ், அந்த படத்தில் ரோபோ ஷங்கரை நடிக்க வைத்ததற்கு காரணம். ஒரு டி.வி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வெங்கடேஷ் சென்றிருந்தாராம்.

அப்போது அவர் முன்பு காமெடி நிகழ்ச்சியில் நடித்துக்காட்டினாராம் ரோபோ ஷங்கர். அந்த நிகழ்ச்சி படுகாமெடியாக இருந்ததாம். அதனால் மேடையிலேயே விழுந்து விழுந்து சிரித்து விட்டாராம் ஏ.வெங்கடேஷ்.

அதனால்தான் அவரை எப்படியேனும் தனது படத்தில் காமெடியனாக நடிக்க வைக்க வேண்டும் என்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர், தனது ரொம்ப நல்லவன்டா நீ படத்தில் ஷோலோ காமெடியனாக நடிக்க வைத்தார்.

இதையடுத்து, தற்போது தனுஷ் நடிக்கும் மாரி உள்பட பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார் ரோபோ ஷங்கர். இந்த நிலையில், ஏ.வெங்கடேஷ் மட்டுமின்றி, ரோபோ ஷங்கர் நடிக்கும் மற்ற படங்களின் இயக்குனர்களும், அவரது காமெடி சிறப்பாக இருப்பதாக சொல்லி மற்ற டைரக்டர்களிடமும் அவருக்கு ரெகமண்ட் செய்து வருகின்றனர். இதனால் டைரக்டர்களின் ஆதரவோடு கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வருகிறார் ரோபோ ஷங்கர்.

 


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions