பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்

Bookmark and Share

பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்

பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

தொலைக்காட்சியிலும், பொது நிகழ்ச்சிகளிலும் ‘பல குரல்’ (மிமிக்ரி) மன்னனாக விளங்கியவர் ராமநாதன். ஒரு பிஸ்கட் டின்னை வைத்துக் கொண்டு பல வருடங்கள் மேடை நிகழ்ச்சிகளை நடத்தியவர்.

1970-களில் அமெரிக்கா ராக்கெட் விட்ட சமயம், கவிஞர் வில்லிப்புத்தன், ‘ராக்கெட்’ என்று அடைமொழி வைத்துக்கொள், கொஞ்சம் வேகமாக இருக்கும் என்று சொல்ல, அன்றிலிருந்து ‘ராக்கெட் ராமநாதன்’ ஆனார்.

74 வயதான இவர் ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண்சோறு, கோயில் யானை உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழக அரசின் கலைமாமணி நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகளையும் பெற்றவர்.

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த இவருக்கு பானுமதி என்ற மனைவியும், சாய்பாலா என்ற மகளும், சாய்குரு பாலாஜி என்ற மகனும் உள்ளனர். இவரது உடல் நல்லடக்கம் இன்று மாலை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

ராமநாதன் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Post your comment





Related News
16ம் தேதி முதல் படங்களை ஓட்டுவோம் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பு!
“விஜய் பெரிய ஹீரோ ஆவதற்கு நாங்கள் தான் காரணம்” ; ‘ஆறாம் திணை’ விழாவில் அபிராமி ராமநாதன் அதிரடி பேச்சு..!
சினிமா உயிருடன் இருப்பது சிறு முதலீட்டுப் படங்களால்தான்- அபிராமி ராமநாதன் பேச்சு
சினிமாத்துறைக்கு வந்துவிட்டால் வேறு தொழிலுக்கு செல்லமுடியாது: அபிராமி ராமநாதன் பேச்சு
அபிராமி ராமநாதன் 68வது பிறந்த நாள்! - எஸ்பி முத்துராமன் வாழ்த்து
\'சிவாஜியை விட அதிக அரங்குகளில்\'... அஞ்சானுக்கு எதுக்கு இந்த பப்ளிசிட்டி?
இயக்குனர் சாரதா ராமநாதனின் நாட்டிய சினிமா..!
கமல்,ரஜினி,அமிதாப் கூட்டாக நடித்த படத்தை இயக்கிய பிரபல திரைப்பட தயாரிப்பாளர் - எஸ்.ராமநாதன் மரணம்!
கமல், தியேட்டர் அதிபர்களுக்கிடையே சுமூக பேச்சு விஸ்வரூபம் முதலில் தியேட்டர்களில் ரிலீஸ்-அபிராமி ராமநாதன்!
விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக பேசத்தயாராக இருக்கிறோம்- அபிராமி ராமநாதன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions