பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்

Bookmark and Share

பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்

துப்பறியும் திரைப்படமான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் கேன்சர் நோய் காரணமாக ஸ்விச்சர்லாந்தில் காலமானார்.ஆங்கில திரைப்பட உலகின் முக்கிய படமாக இன்று வரை கருதப்படும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை.

உளவு, துப்பறிதல் ஆகிய காட்சியமைப்புகள் இப்படங்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், இத்திரைப்பட வரிசைகளில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் (89) இன்று காலமானார்.கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த இவர் ஸ்விசர்லாந்தில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார்.

மோரேவின் மரண செய்தியை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். லண்டனில் பிறந்த இவர் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மட்டுமல்லாது வேறு சில ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

யூனிசெப் அமைப்பின் நலத்தூதராகவும் பணியாற்றியுள்ள ரோஜர், சுகாதாரப் பணிகளுக்காக அதிக அளவு நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளார். ரோஜரின் மறைவுக்கு உலக சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.


Post your comment





Related News
`அவதார்' படக்குழுவில் இணைந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பிரபலம்
ஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்! அடக் கடவுளே…
குழந்தை பருவத்தில் இருந்தே இசையோடு விளையாடுபவர் லியான் ஜேம்ஸ்!
அவதார் மூன்றாம் பாகமும் தயாராகிவிட்டது - ஜேம்ஸ் கேமரூன்
சரித்திரம் படைக்கும் ஜேம்ஸ் பாண்டின் “ஃபெக்ட்ரா”
சலீம் மெர்ச்சண்ட்டிடம் நிறைய கற்றுக் கொண்டேன்- லியான் ஜேம்ஸ்
லியான் ஜேம்ஸ் இந்த வருடத்தின் கண்டுப் பிடிப்பு- எல்ரெட்
ரசிகர்களைக் கவர்ந்த ஜேம்ஸ் பாண்ட்
டைட்டானிக், அவதார் படங்களின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்
ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தார் பிரியதர்ஷன்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions