நடிகர் சங்கச் சிக்கலில் கடைசி நேரத்தில் சமரசம் பேசும் ரோஜா!

Bookmark and Share

நடிகர் சங்கச் சிக்கலில் கடைசி நேரத்தில் சமரசம் பேசும் ரோஜா!

நமது சங்க தேர்தல் களத்தில் போட்டியிடும் அணிகள் இரண்டாக, பிளவுபட்டு, பலவிதமான கருத்து வேறுபாடுகளுடன் பத்திரிகை செய்திகள் தினமும் வந்தவண்ணம் இருக்கின்ற இந்த நிலை நீடித்தால், மொத்தமாக எல்லா நடிகர்களுக்கும் இழுக்கு ஏற்படக்கூடிய நிலையே நிச்சயம் உருவாகும்.

ஒரு அணியில் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார் போன்ற அனுபவம் பெற்றவர்கள், மறு அணியில், விஷால், நாசர், சூர்யா, கார்த்தி என்று பல புதியவர்கள் இருந்தாலும் அனைவரும் சங்கத்தின் நலனுக்காக உழைக்க விரும்பும் உறுப்பினர்கள் என்பதில் சிறிதேனும் ஐயம் இல்லை.

‘தென்னிந்திய நடிகர் சங்க கட்டட ஒப்பந்தத்தில் இது தவறாக இருக்கிறது, இதை நீக்கவேண்டும் என்று சிவக்குமார் அவர்களோ, சூர்யா, கார்த்தி, விஷால், பொன்வண்ணன், நாசர் அவர்களோ யாருமே இதுவரை என்னிடம் பேசியதில்லை. அது குறித்து கேட்டதில்லை.உண்மையில் இந்த ஒப்பந்தம் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குச் சாதகமானது.

இருப்பினும் உண்மையிலேயே அவர்களின் கோரிக்கை அதுதான் என்றால் அந்த ஒப்பந்தத்தில் எந்த தவறு இருந்தாலும் அதை மாற்றிக் கொடுக்கிறேன்’ என்று தெரிவித்தார். அப்போது எந்த பிரச்னையும் இல்லை. அப்படி என்றால் ஏன் இந்த தகராறு…? பொதுவாகவே நடிகர்கள் உணர்வுபூர்வமானவர்கள்.

யாரோ ஒருசிலர் அவர்கள் உணர்வுகளைத் தூண்டிவிட்டு ஒன்று சேரவிடாமல் தடுத்து இந்த அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பது புரிகிறது. நாம் அனைவரும் பிளவுபடாமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

இதற்கு அனைவரும் ஒத்துழைத்து நம் ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும் விதமாக நாம் செயல்பட வேண்டும். இதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions