இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என நினைக்கவில்லை - 'டங்கமாரி..' ரோகேஷ்!

Bookmark and Share

இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என நினைக்கவில்லை - 'டங்கமாரி..' ரோகேஷ்!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கானா பாடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் வட சென்னையை குறிவைத்து நிறைய பாடல்கள் வர தொடங்கியுள்ளன. அந்தவகையில், லேட்டஸ்ட் ஹிட் பாடல் 'டங்கமாரி... ஊதாரி...'. கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ’அனேகன்’ படத்தில் தான் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது.

அனேகன் படம் நேற்று(பிப். 13ம் தேதி) வெளியானாலும், இப்படத்தின் பாடல்கள் சில மாதங்களுக்கு முன்பே வெளியானதால் அப்போதே இந்தப்பாடல் ஹிட்டாகிவிட்டது.

இப்போது திரையில் பார்க்கும் இந்தபாடலுக்கு இன்னும் கூடுதல் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்பாடலை எழுதியுள்ள ரோகேஷிடம் இதுப்பற்றி கேட்டபோது அவர் அளித்த மகிழ்ச்சிகரமான பேட்டி இதோ.... நான் வியாசர்பாடியில் வசிக்கிறேன்.

படிப்பு சரியாக வராததால் 9ம் வகுப்பு படிக்கும்போதே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். 3 வருடமாக கானா பாடல் எழுதி வருகிறேன். இதுவரை 50-60 கானா பாடல்கள் எழுதியிருக்கிறேன்.

நான் எழுதிய பாடல்கள் எல்லாம் கானா ஆல்பமாக உருவாகியுள்ளது. என் பாடல் வரிகளை பாலசந்தர், குணா, மைக்கேல் முத்து போன்றவர்கள் பாடியுள்ளனர். முதன்முறையாக நான் சினிமாவில் எழுதிய பாடல் ’டங்கமாரி...’. இந்தப்பாடலை எழுதும்போதே எனக்கு தெரியும் இது ஹிட்டாகும் என்று... ஆனால் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

எனக்கு இப்படியொரு வாய்ப்பை கொடுத்த தனுஷ், கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தற்போது, ஜெயம் ரவி நடித்து வரும் ’ரோமியோ ஜூலியட்’ படத்தில் கானா பாட்டு எழுதி வருகிறேன். தொடர்ந்து நல்ல நல்ல கானா பாடல்களை எழுதுவேன் என்று கூறினார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions