இயக்குனர் A. வெங்கடேஷ் ரொம்ப நல்லவன்டா நீ

Bookmark and Share

இயக்குனர் A. வெங்கடேஷ் ரொம்ப நல்லவன்டா நீ

அனல் பறக்கும் ஆக்க்ஷன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் A. வெங்கடேஷ். மகாபிரபு, பகவதி, ஏய், தம், குத்து, துரை, மலை மலை சண்டமாருதம என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். சரிசம அளவில் செண்டிமெண்ட், காதல், நகைச்சுவை ஆக்சன் கலந்து ஒரு ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் முன்னோடியாய் திகழ்ந்து வருகிறார். முதன் முறையாக முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொண்ட ‘ரொம்ப நல்லவன்டா நீ’ படத்தை இயக்குகிறார்.    
 
இப்படத்தை ராண்டேவோ மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக் குமார் நாயர் தயாரிக்கிறார். நாயகனாக மிர்ச்சி செந்தில், கதாநாயகியாக சுருதி பாலா நடிக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க  வில்லனாக எத்தன் புகழ் ‘ சர்வஜித்’ நடிக்கிறார். முன் பின் தெரியா இரு நபர்களின் நட்பும், அதை தொடர்ந்து வரும் சம்பவங்களின் தொகுப்பே ‘ரொம்ப நல்லவன்டா நீ’.
 
 “எனக்கும் நகைச்சுவைக்கும் உள்ள நட்பு அதீதமானது. காதல் படமோ,ஆக்ஷன் படமோ  நகைச்சுவை இல்லாமல் நான் படமெடுக்க மாட்டேன். இருப்பினும் முழு நீள காமெடி படம் செய்ய வேண்டும் என்பது ஒரு புதிய அனுபவமாய் இருந்தது. மிர்ச்சி செந்தில் அவருக்கு  கொடுத்த கதாப்பாத்திரத்தை கண கச்சிதமாக செய்து முடித்தார். அறிமுக நாயகி ஸ்ருதி பாலா மற்றும் ரோபோ சங்கர் மிக அழகாக நடித்துள்ளனர் “ என்றுக் கூறினார் இயக்குனர் A. வெங்கடேஷ். 


Post your comment





Related News
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2!
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions