ரோமியோ ஜூலியட் படம் சாதனை!

Bookmark and Share

ரோமியோ ஜூலியட் படம் சாதனை!

சமீபத்தில் வெளியான படங்களில் ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படம்தான் வெற்றிப்படம் என்கின்றனர் விநியோகஸ்தர்கள். சில படங்கள் வெளியான அடுத்தநாளே வெற்றி வெற்றி என்று கூவுகிறார்கள்.

அதெல்லாம் வெற்றிப்படம் என மக்களை நம்ப வைத்து தியேட்டருக்கு வர வைக்கும் தந்திரம்தான். வெற்றிப்படம் என்று விளம்பரப்படுத்தப்படும் படங்கள் எல்லாம் உண்மையான வெற்றிப்படம் இல்லை.

ரூ.80 லட்சத்தில் எடுக்கப்பட்ட காக்கா முட்டை படம் இதுவரை ரூ.15 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. காக்கா முட்டை படத்தை அடுத்து வசூலில் வெற்றியடைந்த படம் என்றால் ரோமியோ ஜூலியட் படம்தான்.

இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் தமிழ்நாட்டில் மட்டும் 11 கோடி ரூபாய் ஷேர் கிடைத்திருக்கிறதாம். ரோமியோ ஜூலியட் படம் வர்த்தகரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்ததினால் அப்படத்தின் சாட்டிலைட் உரிமை 6.5 கோடிக்கு விலை போயிருக்கிறது. சமீபத்தில் வெளியான படங்களில் சாட்டிலைட் ரைட்ஸ் அதிகவிலைக்கு விற்கப்பட்ட படம் ரோமியோ ஜூலியட் படம்தான்.


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
போகன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!
பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது
இந்தியில் ரீமேக்காகும் ரோமியோ ஜூலியட்?
ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
ரோமியோ ஜுலியட் ஹிட்டாமே...?
ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!
இடைத்தேர்தல் எதிரொலி: சினிமாவுக்கு கேளிக்கை வரி ரத்து.?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions