டங்காமாரியை தூக்கி சாப்பிடுமா ‘டண்டனக்கா’?

Bookmark and Share

டங்காமாரியை தூக்கி சாப்பிடுமா ‘டண்டனக்கா’?

தனுஷ் நடித்த அனேகன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் தான், ‘டங்காமாரி'. ரசிகர்களிடையே இப்பாடலுக்கு செம வரவேற்பு. இந்த அளவுக்கு "வரலாற்றுச் சிறப்புவாய்ந்த" இந்த வெற்றிப் பாடலை எழுதியவர் ரோகேஷ்.

முதல் பாடலிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலமான ரோகேஷ், தற்போது ரோமியோ ஜூலியட் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் "ரோமியோ ஜூலியட்".

கதை, திரைக்கதை எழுதி லக்ஷ்மன் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஹன்சிகா மற்றும் பூனம் பாஜ்வா நடித்துள்ளனர்.இது தவிர வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் டங்காமாரி புகழ் ரோகேஷ் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இமான் இசையில் இப்பாடலை அனிருத் பாடியுள்ளார்.

‘டண்டனக்கா...' எனத் தொடங்கும் இப்பாடல், ‘எங்க தல எங்க தல டீ ஆரு, சென்டிமென்ட்டுல தார்மாறு, மைதிலி என்னை காதலி"ன்னாரு, அவரு உண்மையா, லவ் பண்ண சொன்னாரு, மச்சான் - அங்க தான்டா, எங்க தல நின்னாரு" எனத் தொடர்கிறது.இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர் லக்ஷ்மன் கூறுகையில், ‘இன்றைய இளைஞர்களின் செல்லப் பாடலாக இப்பாடல் அமையும் என்பதில் ஐயமில்லை.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக சிறப்பாக வந்திருக்கிறது ரோமியோ ஜூலியட் பெரிய வெற்றிப் படமாகும்" என்கிறார்.அனேகன் படத்தில் இடம் பெற்ற டங்கமாரி பாடலைப் போன்றே இப்பாடலும் பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தரும் என ரோமியோ ஜூலியட் படக்குழு நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
போகன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!
பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது
ரோமியோ ஜூலியட் படம் சாதனை!
இந்தியில் ரீமேக்காகும் ரோமியோ ஜூலியட்?
ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
ரோமியோ ஜுலியட் ஹிட்டாமே...?
ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions