ஏப்ரல் ரேசில் களம் இறங்கும் ரோமியோ ஜூலியட்

Bookmark and Share

ஏப்ரல் ரேசில் களம் இறங்கும் ரோமியோ ஜூலியட்

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் பூனம் பஜ்வா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் வம்சி கிருஷ்ணா, கணேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். லக்ஷ்மன் இயக்கி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்காக மும்பையிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான முறையில் செட் அமைத்து பாடல் காட்சிகளை படமாக்கினர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படத்தின் பாடல்களை மார்ச் 12-ம் தேதியும், படத்தை ஏப்ரல் 10-ம் தேதியும் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த தேதியில் கமலின் உத்தம வில்லன் படமும், ஏப்ரல் 2-ம் தேதி உதயநிதி ஸ்டாலினின் ‘நண்பேன்டா’ படமும், சண்முக பாண்டியன் நடிக்கும் ‘சகாப்தம்’ படமும் வெளியாக இருக்கிறது.

பள்ளி விடுமுறை மாதம் என்பதால் முன்னணி நடிகர்களின் பல படங்கள் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
போகன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!
பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது
ரோமியோ ஜூலியட் படம் சாதனை!
இந்தியில் ரீமேக்காகும் ரோமியோ ஜூலியட்?
ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
ரோமியோ ஜுலியட் ஹிட்டாமே...?
ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions