டி.ராஜந்தரை புண்படுத்த வேண்டாம் - இயக்குநரின் வேண்டுகோள்!

Bookmark and Share

டி.ராஜந்தரை புண்படுத்த வேண்டாம் - இயக்குநரின் வேண்டுகோள்!

ஒரே பாடலில் உலகப் புகழ் பெறுவதில் தனுஷ் நடிக்கும் படங்கள் இடம் பிடித்து விடுகின்றன. அந்தப் பாடல்கள் இடம் பெறும் படங்கள் ஓடுகிறதோ இல்லையோ, படத்தின் பாடல்கள் பரபரப்பாக பேசப்பட்டு விடுகின்றன.

'3' படத்தில் தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' உலக அளவில் வரவேற்கப்பட்டு 'யு டியூப்' மூலம் ஒரு படத்தின் விஷயம் எந்த அளவிற்கு சென்றடைகிறது என்பதை தமிழ்த் திரையுலகினருக்குப் புரிய வைத்தது. அதன் பின் 'யு டியூப்' பில் பல விஷயங்கள் அரங்கேறி வருகின்றன.

'கொலை வெறி' பாடலுக்குப் பிறகு 'அனேகன்' படத்தில் இடம் பெற்ற 'டங்காமாரி' பாடல் இன்று எல்லா இடங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. மெட்ராஸ் பாஷையில் ரோகேஷ் என்ற புதிய பாடலாசிரியரால் எழுதப்பட்ட இந்தப் பாடல்தான்  'அனேகன்' படம் ஓரளவிற்கும் வசூல் செய்ய காரணமாக அமைந்தது.

குட்டீஸ்களுக்கு இந்தப் பாடல் நிறையவே பிடித்து விட்டது. அடுத்து 'ரோமியோ ஜுலியட்' என்ற படத்தில் இமான் இசையில் ராகேஷ் மீண்டும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

'டண்டனக்கா' என ஆரம்பமாகும் அந்தப் பாடல் டி.ராஜேந்தரைப் பற்றிய ஒரு பாடலாக அமைந்திருக்கிறது. இந்தப் பாடல் கொஞ்சம் கொஞ்சமாக வைரலாகப் பரவி வருகிறது.

கடந்த சில நாட்களாக இந்தப் பாடலின் ஆடியோவை வைத்து, டி.ராஜேந்தரின் படக் காட்சிகளை இணைத்து யு டியூபில் பதிவேற்றி வருகிறார்கள். அது கிண்டிலடிப்பதாகவே உள்ளது. அது பற்றி கேள்விப்பட்ட 'ரோமியோ ஜுலியட்' படத்தின் இயக்குனர் லட்சுமண், “அனைவருக்கும் பணிவான வேண்டுகோள்.

டி.ராஜேந்தர் சாரை வைத்து மோசமான வீடியோவை உருவாக்க வேண்டாம். இந்தப் பாடலை நான் அவருக்காக சமர்ப்பித்துள்ளேன். அவரை நான் மிகவும் நேசிப்பவன், தயவு செய்து அப்படியெல்லாம் அவரை புண்படுத்த வேண்டாம். பாடலை ரசியுங்கள், யாரையும் காயப்படுத்தாதீர்கள்,” என வேண்டுகோள் வைத்துள்ளார்.


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
போகன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!
பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது
ரோமியோ ஜூலியட் படம் சாதனை!
இந்தியில் ரீமேக்காகும் ரோமியோ ஜூலியட்?
ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
ரோமியோ ஜுலியட் ஹிட்டாமே...?
ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions