ரோமியோ ஜூலியட்டை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்

Bookmark and Share

ரோமியோ ஜூலியட்டை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்

தங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்களை மட்டுமின்றி பிற தயாரிப்பாளர்களின் படங்களையும் வாங்கி வெளியிடுவதில் ஸ்டுடியோக்ரீன் பட நிறுவனம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

அதேபோல் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் பிறரின் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. ஸ்டுடியோக்ரீன், ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்களைப்போல் படங்களை வெளியிடுவதில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன்.

தனுஷ் தயாரித்த வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை படங்களை பிரம்மாண்டமானமுறையில் பப்ளிசிட்டி செய்து தமிழகம் முழுக்க வெளியிட்டது மதன்தான். அவர் செய்த பப்ளிசிட்டிதான் வேலையில்லா பட்டதாரி படத்துக்கு மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் தேடிக்கொடுத்தது.

காக்கி சட்டை படத்தையும் வெற்றிபெற வைத்தது மதனின் விளம்பர வித்தகம்தான் என்று விநியோகஸ்தர்கள் பலரும் சொல்கின்றனர். வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை படங்களை அடுத்து மதன் வாங்கி இருப்பது - ரோமியோ ஜூலியட் படத்தை.

ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா முதலானோர் நடித்துள்ள  ரோமியோ ஜூலியட் படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ளார்.

டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தை லக்ஷ்மன் இயக்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்  தணிக்கை செய்யப்பட்ட இப்படத்துக்கு தணிக்கைக் குழுவினர் யு சான்றிதழ் வழங்கினார்கள்.  

ரோமியோ ஜூலியட் படத்தில் இடம்பெற்றுள்ள டண்டணக்கா என்ற பாடல் தன்னை அவமானப்படுத்துவதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் டி.ராஜேந்தர். அவரை சமாதானப்படுத்தி விரைவில் ரோமியோ ஜூலியட் படத்தை வெளியிட உள்ளனர்.                                                 

 


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
போகன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!
பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது
ரோமியோ ஜூலியட் படம் சாதனை!
இந்தியில் ரீமேக்காகும் ரோமியோ ஜூலியட்?
ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
ரோமியோ ஜுலியட் ஹிட்டாமே...?
ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions