டண்டனக்கா விவகாரம்! ரோமியோ ஜூலியட் படப்பிடிப்பு நிறுத்தம்!!

Bookmark and Share

டண்டனக்கா விவகாரம்! ரோமியோ ஜூலியட் படப்பிடிப்பு நிறுத்தம்!!

தனுஷ் நடித்த அனேகன் படத்தில் இடம்பெற்ற டங்காமாரியைப் போன்று தானும் ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்று மெனக்கெட்டு வந்த இசையமைப்பாளர் டி.இமான், அதற்காக டங்காமாரியை எழுதிய ரோகேஷை வைத்தே டண்டனக்கா என்ற பாடலை எழுதி வாங்கி அதிரடி பாடலாக வெளியிட்டு விட்டார்.

அப்படத்தின் ப்ரமோஷன்களில் இப்போது டண்டனக்கா பாடல்தான் முதலிடம் பிடித்து வருகிறது. ஆனால் இந்த பாடல் தனது இமேஜை களங்கப்படுத்துவது போல் உள்ளது என்று டி.ராஜேந்தர் அந்த பாடலை எப்படியும் தடை செய்து விட வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட்டார்.

அதையடுத்து ஜெயம்ரவி சமூகம், டி.ஆரை சந்தித்து, எங்கள் குடும்பமே உங்கள் ரசிகர்கள்தான் அதுவும் இந்த படத்தில் உங்களது ரசிகராகவே ஜெயம்ரவி நடித்திருக்கிறார்.

அப்படியிருக்க படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்று நினைத்த பாடலை நீங்களே தடுக்கலாமா? என்று செண்டிமென்டாக பேசிப்பார்த்தார்கள். ஆனால் செண்டிமென்ட் பார்ட்டியான டி.ஆர், இந்த விசயத்தில் இறங்கி வரவில்லை.

நான் முன்வச்ச காலை எப்பவுமே பின்வச்சதில்லை என்று சொல்லிக்கொண்டு, டண்டனக்காவை எப்படியேனும் ரோமியோ ஜூலியட் படத்தில் இருந்து நீக்கி விட வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார் டி.ஆர்., அதனால் இனிமேல் அவரை வழிக்கு கொண்டு வருவது நடக்காத காரியம் என்ற முடிவுக்கு வந்து விட்ட அப்படக்குழுவினர் இப்போது சிம்புவிடம் பேச்சுவார்ததை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இத்தனை குழப்பத்திற்கிடையே எப்படி படப்பிடிப்பு நடத்த முடியும் என்று தற்காலிகமாக ரோமியோ ஜூலியட் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
போகன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!
பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது
ரோமியோ ஜூலியட் படம் சாதனை!
இந்தியில் ரீமேக்காகும் ரோமியோ ஜூலியட்?
ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
ரோமியோ ஜுலியட் ஹிட்டாமே...?
ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions