இந்தியில் ரீமேக்காகும் ரோமியோ ஜூலியட்?

Bookmark and Share

இந்தியில் ரீமேக்காகும் ரோமியோ ஜூலியட்?

ஜெயம் ரவி- ஹன்சிகா நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இப்படத்தை லட்சுமணன் இயக்கியிருந்தார். இமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் ஏற்பட்டது. குறிப்பாக ‘டண்டனக்கா...’ பாடல் படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியது. இப்படத்தை வேறுமொழிகளில் ரீமேக் செய்ய பலர் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை பார்த்திருக்கிறார். இப்படம் அவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. இந்தியில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பிரபுதேவா இப்படத்தை தகுந்த நடிகர்களை வைத்து இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஜெயம் ரவி- ஹன்சிகா நடித்த ‘எங்கேயும் காதல்’ படத்தை பிரபுதேவா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
போகன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!
பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது
ரோமியோ ஜூலியட் படம் சாதனை!
ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
ரோமியோ ஜுலியட் ஹிட்டாமே...?
ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!
இடைத்தேர்தல் எதிரொலி: சினிமாவுக்கு கேளிக்கை வரி ரத்து.?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions