ரோமியோ ஜுலியட் ஹிட்டாமே...?

Bookmark and Share

ரோமியோ ஜுலியட் ஹிட்டாமே...?

ஒரு படம் வெளிவந்த உடனே இரண்டு நாட்களுக்குள் அந்தப் படத்தின் சக்சஸ் மீட் என்று பத்திரிகையாளர்களை அழைத்தால் கண்டிப்பாக அந்தப் படம் ஹிட் ஆகவில்லை என்றுதான் அர்த்தம். அப்படித்தான் நேற்று திடீரென ரோமியோ ஜுலியட்; படத்தை வாங்கியுள்ள காஸ்மோ வில்லேஜ் வினியோக நிறுவனம் பத்திரிகையாளர்களை அழைத்து இந்தப் படம் வெற்றி பெற்று விட்டது என அறிவித்தது. பொதுவாக தயாரிப்பாளர்கள்தானே சக்சஸ் மீட் வைப்பார்கள், வினியோகஸ்தர் ஏன் வைக்கிறார் என்ற கேள்வி நேற்றும் எழுந்தது. வினியோகஸ்தரே அறிவித்தால்தானே படம் வெற்றி என்று நம்புவார்கள், அதனால்தான் வினியோகஸ்தர் அழைத்து படத்தின் வெற்றியை அறிவித்திருக்கிறார்.

கோலிவுட் வட்டாரங்களில் விசாரித்தால் மாசு படத்தின் தோல்விக்குப் பிறகு இளைஞர்களைக் கவரும் விதத்தில் வேறு எந்தப் படமும் இல்லை. சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படம் பி அன்ட் சி சென்டர்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. ரோமியோ ஜுலியட் படத்திற்கு கடந்த மூன்று நாட்களாக ஓரளவிற்கு நல்ல வசூல் இருக்கிறது. படத்திற்கு இளைஞர்களின் கூட்டம் தொடர்ந்து வருவதால் படத்தின் வசூலும் நன்றாகவே இருக்கிறது என்கிறார்கள்.

இதுவரை இந்தப்படம் சுமார் ரூ.5 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மிகப்பெரும் லாபம் கிடைக்க வாய்ப்பில்லை என்றாலும் ஓரளவிற்காவது லாபம் வரக்கூடிய சூழல் இருக்கிறது. அது வார நாட்களில் படத்தின் வசூலைப் பொறுத்து அமையும் என்கிறார்கள்.


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
போகன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!
பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது
ரோமியோ ஜூலியட் படம் சாதனை!
இந்தியில் ரீமேக்காகும் ரோமியோ ஜூலியட்?
ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!
இடைத்தேர்தல் எதிரொலி: சினிமாவுக்கு கேளிக்கை வரி ரத்து.?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions