'டண்டணக்கா...' விவகாரம்... வாயைத் திறக்காத படக்குழு

Bookmark and Share

'டண்டணக்கா...' விவகாரம்... வாயைத் திறக்காத படக்குழு

லட்சுமண் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரோமியோ ஜுலியட்' படத்தில் இமான் இசையில் ரோகேஷ் எழுதி, அனிருத் பாடியுள்ள 'டண்டணக்கா...' பாடல் தன்னை அவமரியாதை செய்வதாகக் கூறி அந்தப் பாடல் சம்பந்தப்பட்டவர்களுக்கு டி.ராஜேந்தர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்தப் பாடலின் உருவாக்க வீடியோ, யு டியூப் இணையதளங்களிலும் சில தொலைக்காட்சிகளிலும் ஏற்கெனவே ஒளிபரப்பாகி வருகிறது. பாடலும் சூப்பர் ஹிட்டாகி விட்டது. பொதுவாக சினிமாவில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக பிரச்னை எழுந்தால் உடனே மறுப்பும், அது குறித்து விளக்கமும் அளிக்கப்படும்.

ஆனால், டி.ஆர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி சில நாட்கள் ஆகியும் இது குறித்து படக்குழுவினர் இதுவரை வாயைத் திறக்காமல் உள்ளனர். டி.ஆருக்கு இந்தப் பாடல் குறித்து ஆட்சேபம் இருந்த சூழ்நிலையில் அவரை சந்தித்து விளக்கமளிக்க படக்குழுவினர் ஏற்கெனவே முயற்சித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து டி.ஆர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். 1 கோடி ரூபாய் வரை அவர் நஷ்ட ஈடு கேட்டுள்ள நிலையில் 'ரோமியோ ஜுலியட்' படத் தயாரிப்பாளரோ, இயக்குனரோ, இசையமைப்பாளரோ இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார்கள்.

ஒரு வேளை திரை மறையில் சமரச முயற்சிகள் நடக்கவும் வாய்ப்புள்ளது என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions