சென்சாருக்கு செல்லும் ரோமியோ ஜூலியட்

Bookmark and Share

சென்சாருக்கு செல்லும் ரோமியோ ஜூலியட்

ஜெயம் ரவி-ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ரோமியோ ஜூலியட்’. இப்படத்தை லட்சுமண் என்பவர் இயக்கியிருக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்து சென்சாருக்கு ரெடியாகியுள்ளது.

இதுகுறித்து இசையமைப்பாளர் டி.இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ரோமியோ ஜூலியட் படத்தின் பின்னணி இசை பணி முடிந்துவிட்டது. அடுத்தகட்டமாக சென்சாரை நோக்கி பயணிக்கவிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில்தான் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு முன்னதாகவே ஜெயம் ரவியும்-ஹன்சிகாவும் இணைந்து ‘என்றென்றும் காதல்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது, இரண்டாவது முறையாக இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

ஜெயம் ரவி நடிப்பில் ‘அப்பாடக்கர்’ படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மேலும், பூலோகம் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டாலும் ரிலீசாகாமல் முடங்கிக் கிடக்கிறது. 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions