டண்டனக்கா கலவரத்தை ஏற்படுத்திய டங்காமாரி ரோகேஷ்!

Bookmark and Share

டண்டனக்கா கலவரத்தை ஏற்படுத்திய டங்காமாரி ரோகேஷ்!

ஜெயம்ரவி நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்தில் இடம்பெற்றுள்ள டண்டனக்கா என்ற பாடலுக்கு இசையமைத்தது டி.இமான், பாடியது அனிருத். என்றாலும், அந்த டண்டனக்கா பாடலை எழுதியவர் அனேகன் படத்தில் டங்காமாரி பாடலை எழுதிய ரோகேஷ்.

இவர் பாட்டுக்கு ஒரு சர்ச்சைக்குரிய வரியை எழுதிவிட்டு போய் விட்டார். ஆனால் இப்போது அதுவே பெருங்கலவரத்தை உண்டு பண்ணியிருக்கிறது. ரோமியோ ஜூலியட் படத்தில் டி.ஆரின் ரசிகராக நடிப்பதால்தான் அப்படியொரு பாடலை அந்த படத்தில் வைத்திருக்கிறோம் என்று என்னதான் ஜெயம்ரவி சமானதாப்படுத்தினாலும் அதற்கு டிஆர் செவிசாய்ப்பதாக இல்லை.

ஏற்கனவே மேடைக்கு மேடை தன்னை டண்டனக்கா என்று சொல்லி மிமிக்ரி கலைஞர்கள் காயப்படுத்தி வரும்நிலையில், இப்போது சக சினிமாக்காரர்களே டண்டனக்கா என்றொரு பாடலை உருவாக்கி கிண்டலடிப்பதால், டென்சனான டிஆர் அந்த பாடலை தடுக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட்டார்.

இதனால் இந்த ஒரு பாட்டே படத்தின் வெற்றிக்கு அச்சாணியாக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த ரோமியோ ஜூலியட் யூனிட் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறது. அதேசமயம், அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய டிஆர், பாடலை எழுதிய ரோகேஷை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

ஆக வெடிகுண்டு வைத்து கலவரத்தை ஏற்படுத்தியவர், சேதாரமில்லாமல் தப்பித்து விட்டார். மேலும், இப்படியொரு பெருங்கலவரம் கோடம்பாக்கத்தில் நடந்து கொண்டிருக்க, டி.ஆரின் வாரிசான சிம்பு இதுபற்றி இதுவரை எந்தவொரு கருத்தும் சொல்லவில்லை.

மாறாக, ஜெயம்ரவி நடித்துள்ள அப்பாடக்கர் படத்தில் ஒரு பாடல் பின்னணி பாடிக்கொடுத்துள்ளார். விளைவு, இந்த விசயத்தில் சிம்பு அப்பாவுக்கு ஆதரவாக இருக்கிறாரா? இல்லை எதிர்ப்பாக இருக்கிறாரா? என்பது தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.


Post your comment





Related News
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions