டி.ராஜேந்தர் மனசு வைத்தால்தான் 'ரோமியோ ஜூலியட்' ரிலீஸ்

Bookmark and Share

டி.ராஜேந்தர் மனசு வைத்தால்தான் 'ரோமியோ ஜூலியட்' ரிலீஸ்

'ஜெயம்' ரவி, ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா முதலானோர் நடித்துள்ள படம் 'ரோமியோ ஜூலியட்'. 'மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்' நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.

லஷ்மன் இயக்கியுள்ள இப்படம் சில தினங்களுக்கு முன்  தணிக்கை செய்யப்பட்டது! இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு அனைவரும் பார்க்கக் கூடிய 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

தணிக்கையில் எவ்வித சிக்கலும் இல்லை என்றவகையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் கவலையில் உள்ளனர்.

'ரோமியோ ஜூலியட்' படத்தில் இடம்பெற்றுள்ள டண்டணக்கா என்ற பாடல் தன்னை அவமானப்படுத்துவதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த டி.ராஜேந்தர் ஒரு கோடி நஷ்டஈடு கேட்டிருக்கிறார்.

அவரை சமாதானப்படுத்தி வழக்கை வாபஸ் வாங்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். டி.ராஜேந்தருக்கு நெருக்கமான ஆட்கள் மூலம் அவரதுமனசை மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன.

இன்னொரு பக்கம் படத்தின்  நாயகனான ஜெயம்ரவி சிம்பு மூலம் டி.ஆரை கன்வின்ஸ் பண்ண முயன்று வருகிறார். அவரது அப்பாவான எடிட்டர் மோகன் கலைப்புலி தாணு மூலம் டி.ஆரை சமாதானப்படுத்தி வருகிறார். இதில் ஏதாவது ஒரு முயற்சி ஒர்க் அவுட்டானால்  விரைவில் ரிலீசாகவிடும் 'ரோமியோ ஜூலியட்'.


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
பழம்பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்தர் காலமானார்
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
பஞ்ச்சில் அசால்ட் செய்யும் டி.ராஜேந்தர் அவர்களின் மாஸ் பஞ்ச் வசனங்கள் இதோ
பிரபல தனியார் தொலைக்காட்சியை தாக்கி பேசிய டி.ராஜேந்தர்
சிம்பு ஹீரோயின்களை தொட்டு நடிப்பதற்கு நான் தான் காரணம்- டி.ஆர் ஓபன் டாக்
விஜய் பற்றி பேசும் போது கலாய்த்தவர்களுக்கு செம பதிலடி கொடுத்த டி.ஆர்!
எத்தனை வெற்றி கொடுத்தாலும் பணிவுடன் இருப்பவர் விஜய்சேதுபதி: டி.ராஜேந்தர்
லட்சம் கோடி இருந்தாலும் நான் பேசுறதைத்தான் பேசுவேன்: டி.ஆர்.
அம்மா அப்பாவை ஜோடியாக பாடவைத்த சிம்பு! அனிருத் கூட்டணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions