ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் கமல்..?

Bookmark and Share

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் கமல்..?

இப்படித்தான் படங்களை இயக்குவார் என ஒரு சில இயக்குனர்களை ஒரு வட்டத்துக்குள் அடைக்க முடியாது அல்லவா..? அப்படிப்பட்ட சிலரில் குறிப்பிடத்தக்க ஒருவர் தான் மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

மலையாளத்தில் ஹவ் ஓல்டு ஆர் யூ மற்றும் அதன் தமிழ் ரீமேக்கான 36 வயதினிலே என சாப்ட்டான படங்களையே இயக்கிக்கொண்டிருக்கிறாரே என இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூசை தவறாக எடைபோட்டு விடவேண்டாம்.

கடந்த 2013ல் பிருத்விராஜ் நடித்து மலையாளத்தில் வெளியான  மும்பை போலீஸ் படத்தை பார்த்தீர்கள் என்றால் இவரா இப்படி ஒரு ரப் அன்ட் டப் போலீஸ் கதையை படமாக்கினார் என மூக்கின்மீது விரலை வைப்பீர்கள்.

அதுமட்டுமல்ல, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை வைத்து பத்து வருடங்களுக்கு முன்னரே உதயநாணுதாரம் என்கிற சினிமா சம்பந்தமான சூப்பர்ஹிட்டை கொடுத்தவர். இந்தப்படம் தான் தமிழில் பிருத்விராஜ் நடிக்க வெள்ளித்திரை என வெளியானது.

ஆக ரோஷன் ஆண்ட்ரூசுக்கும் தமிழுக்கும் ஒரு பந்தம் இருக்கவே செய்கிறது. அந்த பந்தம் இன்னும் உறுதியாகும் விதமாக கமல் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக ஒரு பேட்டியின் போது சொல்லியிருக்கிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

கமலிடம் சில கதைகளைப்பற்றி விவாதித்துள்ளதாகவும், அதில் ஒரு கதை கமலுக்கு பிடித்துவிட்டதால் அதை டெவலப் செய்ய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அனேகமாக இது மலையாளம், தமிழ் என இரு மொழிப்படமாக உருவாகலாம்.

தற்போது பிருத்விராஜை வைத்து தனது கனவுப்படமான  நாள ராவிலே படத்திற்கான வேலைகளில் பிசியாக இருக்கிறார் ரோஷன். கமலும் தொடர்ந்து மலையாள கதைகளிலும், மலையாள இயக்குனர்களிடமும் பணிபுரிய ஆர்வம் காட்டுவதால் இந்தக்கூட்டணி சாத்தியமாவதற்கு நூறு சதவீதம் வாய்ப்பு இருப்பதாகத்தான் தெரிகிறது.


Post your comment





Related News
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
அழகு நாயகன் ரித்திக் ரோஷனா இது? - ரசிகருக்கு அதிர்ச்சியுள்ளாக்கிய புகைப்படம்.!
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions