மீண்டும் டோலிவுட்டில் உருவாகும் சரித்திர திரைப்படம்

Bookmark and Share

மீண்டும் டோலிவுட்டில் உருவாகும் சரித்திர திரைப்படம்

டோலிவுட்டில் பிரமாண்ட இயக்குநர்  ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த சரித்திர திரைப்படமான பாகுபலியின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து திரைக்கு வரவிருக்கும் சரித்திர திரைப்படம் ருத்ரமாதேவி.  

3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தை  இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 4 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசத்தில் காகதீய வம்ச ராணியான ருத்ரமாதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து டோலிவுட்டில் தயாராகி வரும் ருத்ரமாதேவி படத்தில் நடிகை அனுஷ்கா ருத்ரமாதேவி ராணியாக நடித்து உள்ளார்.

நாயகியை மையப்படுத்திய இந்த படத்தில் அனுஷ்காவுடன் அல்லு அர்ஜூன், ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரினா, திரேஷா போன்றோரும் நடிக்கின்றனர்.ருத்ரமாதேவி எனும் சரித்திர திரைப்படத்தைத்  தொடர்ந்து மீண்டும் ஒரு  சரித்திரப் படத்தை இயக்க குணசேகர் திட்டமிட்டுள்ளாராம்.

காகதீய வம்சத்தில் இறுதியாக ஆட்சிக்கு வந்த  ருத்ரமாதேவியின் பேரனான ப்ரடபருட்ருடுவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக அப்படத்தை குணசேகர் உருவாகுகின்றாராம்.

இதற்காக "ப்ரடபருட்ருடு" எனும் தலைப்பை பதிவு செய்து குண கிரியேடிவ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் குணசேகர் பணிகளை துவக்கி விட்டாராம். 


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions