தணிக்கையில் யு சான்றிதழ் பெற்ற ருத்ரமாதேவி

Bookmark and Share

தணிக்கையில் யு சான்றிதழ் பெற்ற ருத்ரமாதேவி

காகதீய வம்ச தெலுங்கு ராணியான ருத்ரமாதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து டோலிவுட்டில் தயாராகி வரும் ருத்ரமாதேவி படத்தில் நடிகை அனுஷ்கா ருத்ரமாதேவி ராணியாக நடித்து உள்ளார்.

நாயகியை மையப்படுத்திய இந்த படத்தில் அனுஷ்காவுடன் அல்லு அர்ஜூன், ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரினா, திரேஷா போன்றோரும் நடிக்கின்றனர்.

இளையராஜா இசையமைத்து உள்ள இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் உருவாகி வருகின்றது. இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

அண்மையில் இப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் படக்குழுவினரைப் பாராட்டி படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.இப்படம் ஜூன் 26 ஆம் தேதி தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்திலும் திரைக்கு வருகின்றது. இப்படத்தின் தமிழ் டிரைலரும் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions