'ருத்ரமாதேவி' ஜுன் 26 ரிலீஸ்...!

Bookmark and Share

'ருத்ரமாதேவி' ஜுன் 26 ரிலீஸ்...!

தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கிய குணசேகர் தெலுங்கு, தமிழில் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள 'இந்தியாவின் முதல் 3டி ஸ்டீரியோஸ்கோபிக்' திரைப்படம் 'ருத்ரமாதேவி'.

13ம் நூற்றாண்டில் கக்காத்தியா பேரரசின் ராணியாகத் திகழ்ந்த ராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ருத்ரமாதேவியாக அனுஷ்கா மிகவும் பொருத்தமாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். மற்றும் 'மெட்ராஸ்' நாயகி கேத்தரின் தெரேசா, 'ஓ காதல் கண்மணி' நாயகி நித்யா மேனன், ராணா டகுபதி, அல்லு அர்ஜுன், கிருஷ்ணம் ராஜு, பிரகாஷ் ராஜ், சுமன் உள்ளிட் ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இளையராஜாவின் இசை இந்தப் படத்தின் பிரம்மாண்டத்தை மேலும் உயர்த்திக் காட்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தின் பின்னணி இசையை லண்டனில் வெளிநாட்டுக் கலைஞர்களுடன் அமைத்துள்ளார் இளையராஜா.

'பாகுபலி' படத்தின் டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் இந்தப் படத்தை அந்தப் படத்திற்கு முன் வெளியிடுவதுதான் நல்லது. மேக்கிங்கில் 'பாகுபலி' படம் நிச்சயம் 'ருத்ரமாதேவி'யை விட உயர்வாக இருக்கும் என்று டோலிவுட்டில் சில நாட்களாக பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

அதனால் 'பாகுபலி'க்கு முன்பாகவே 'ருத்ரமாதேவி'யை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 26ம் தேதியன்று இப்படம் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார்கள்.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions