ருத்ரமாதேவி படத்தின் விற்பனை துவக்கம்!

Bookmark and Share

ருத்ரமாதேவி படத்தின் விற்பனை துவக்கம்!

டோலிவுட்டில் 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் சரித்திர திரைப்படமான ருத்ரமாதேவி படத்தை ஒக்கடு போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அனுஷ்கா, அல்லு அர்ஜூன், ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரின் தெரஸா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து தற்போது ருத்ரமாதேவி படத்தின் வெளியீட்டு உரிமைக்கான விற்பனை நடைபெறுகின்றது.

ருத்ரமாதேவி படத்தை கிருஷ்ணா மாவட்டத்தில் திரையிடும் உரிமையை தயாரிப்பாளராக இருந்து விநியோகஸ்தராக மாறியுள்ள சாய் கோர்றபடி ரூ.2.80 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு வாரஹி சலான சித்ரம் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய சாய் கோர்றபடி நான் ஈ படத்தை தெலுங்கில் ஈகா என்ற பெயரில் தயாரித்து வெற்றி கண்டார். அதன் பின்னர் விநியோகஸ்தராக மாறிய சாய் தற்போது ருத்ரமாதேவி படத்தை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.


Post your comment





Related News
புலியை விரட்டிய ருத்ரமாதேவி!
ருத்ரமாதேவியின் முதல் நாள் வசூல் முன்னணி நடிகர்களையே பிரமிக்க வைத்த அனுஷ்கா
மூன்று வருடங்களுக்கு பிறகே திருமணம்: அனுஷ்கா அதிரடி
மீண்டும் தீபாவளிக்கு தள்ளிப் போகும் ருத்ரமாதேவி?
ருத்ரம்மா தேவி நினைத்து ஏமாறும் அனுஷ்கா!
மீண்டும் தள்ளிவைப்பு; ருத்ரமாதேவி
நான் சினிமா மகாராணி: அனுஷ்கா பெருமிதம்
ருத்ரமாதேவி படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு
அந்தப்புரத்தில் அழகு தேவதைகள்...!
செப்டம்பரில் திரைக்கு வரும் ருத்ரமாதேவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions