செப்டம்பரில் திரைக்கு வரும் ருத்ரமாதேவி

Bookmark and Share

செப்டம்பரில் திரைக்கு வரும் ருத்ரமாதேவி

டோலிவுட்டில் உருவாகி வரும் சரித்திர திரைப்படமான ருத்ரமாதேவி திரைப்படத்தில், அனுஷ்கா, நித்யா மேனன், கேத்ரினா, திரேஷா, அல்லு அர்ஜூன், ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்யா மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஜூன் மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்ட இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் நிறைவடையாததால் இப்படத்தை செப்டம்பர் மாதம் திரையிட இப்படத்தின் இயக்குநர் குணசேகர் முடிவு செய்துள்ளார்.

3D தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ருத்ரமாதேவி படத்திற்கு, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும்  ஸ்ரீமந்துடு, நடிகர் ரவிதேஜா நடித்துள்ள கிக் 2 ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருவதால் ருத்ரமாதேவி படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

ருத்ரமாதேவி படத்தில் நடித்துள்ள அனுஷ்கா, அல்லு அர்ஜுன், நித்யா மேனன் ஆகியோரின் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன. எனவே மேலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத குணசேகர் ருத்ரமாதேவி படத்தை  செப்டம்பரில் வெளியிட தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார். 


Post your comment





Related News
புலியை விரட்டிய ருத்ரமாதேவி!
ருத்ரமாதேவியின் முதல் நாள் வசூல் முன்னணி நடிகர்களையே பிரமிக்க வைத்த அனுஷ்கா
மூன்று வருடங்களுக்கு பிறகே திருமணம்: அனுஷ்கா அதிரடி
மீண்டும் தீபாவளிக்கு தள்ளிப் போகும் ருத்ரமாதேவி?
ருத்ரம்மா தேவி நினைத்து ஏமாறும் அனுஷ்கா!
மீண்டும் தள்ளிவைப்பு; ருத்ரமாதேவி
நான் சினிமா மகாராணி: அனுஷ்கா பெருமிதம்
ருத்ரமாதேவி படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு
அந்தப்புரத்தில் அழகு தேவதைகள்...!
ருத்ரமாதேவி இளவரசி முக்தாம்பா...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions