ருத்ரமாதேவி இளவரசி முக்தாம்பா...!

Bookmark and Share

ருத்ரமாதேவி  இளவரசி முக்தாம்பா...!

பாகுபலி  படத்தின் விளம்பரப் பாணியிலேயே  ருத்ரமாதேவி  குழுவும் பயணிக்கிறார்கள் என்று நேற்றே சொல்லியிருந்தோம். தினமும் ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் நேற்று  ருத்ரமாதேவி  இளவரசியான முக்தாம்பாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அந்த முக்தாம்பா வேறு யாருமல்ல,  ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2  ஆகிய வெற்றிப் படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ள, நித்யா மேனன்தான் முக்தாம்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் அனுஷ்கா டைட்டில் ரோலில் நடிக்கிறார். மற்றும் நித்யா மேனன், கேத்தரின் தெரேசா, அதிதி செங்கப்பா, ஹம்சநந்தினி ஆகிய நடிகைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அனுஷ்கா மகாராணி என்றால் நித்யா, கேத்தரின் தெரேசா ஆகியோர் அனுஷ்காவின் மகளாக இளவரசி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களா என்பது இன்னும் வெளியில் தெரியவில்லை.  

பாகுபலி  படம் சரித்திரப் பின்னணியில் இடம் பெற்றிருந்தாலும் அதில் நடித்த அனுஷ்காவும், தமன்னாவும் அழகு தேவதைகளாக இல்லாமல், முதலாமவர் அழுக்கான தேவதையாகவும், இரண்டாமவர் அதிக மேக்கப்பில்லாமலுமே இருந்தார்கள். ஆனால்,  ருத்ரமாதேவி  படத்தில் ஐந்து அழகிய தேவதைகள் அற்புதமான அழகுடன் வலம் வருவார்கள் என்று தெரிகிறது.


Post your comment





Related News
புலியை விரட்டிய ருத்ரமாதேவி!
ருத்ரமாதேவியின் முதல் நாள் வசூல் முன்னணி நடிகர்களையே பிரமிக்க வைத்த அனுஷ்கா
மூன்று வருடங்களுக்கு பிறகே திருமணம்: அனுஷ்கா அதிரடி
மீண்டும் தீபாவளிக்கு தள்ளிப் போகும் ருத்ரமாதேவி?
ருத்ரம்மா தேவி நினைத்து ஏமாறும் அனுஷ்கா!
மீண்டும் தள்ளிவைப்பு; ருத்ரமாதேவி
நான் சினிமா மகாராணி: அனுஷ்கா பெருமிதம்
ருத்ரமாதேவி படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு
அந்தப்புரத்தில் அழகு தேவதைகள்...!
செப்டம்பரில் திரைக்கு வரும் ருத்ரமாதேவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions