ருத்ரமாதேவி படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு

Bookmark and Share

ருத்ரமாதேவி படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு

பாகுபலி எனும் சரித்திர திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து டோலிவுட்டில் தயாராகியுள்ள மற்றும் ஒரு சரித்திர திரைப்படமான ருத்ரமாதேவி படத்தின் திரையிடும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இயக்குநர் குணசேகர், நடிகை அனுஷ்கா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது ருத்ரமாதேவி திரைப்படத்தை செப்டம்பர் 4 ஆம் தேதி திரையிடவுள்ளதாக குணசேகர் தெரிவித்தார். 3D தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ருத்ரமாதேவி படத்தில் நடிகை அனுஷ்கா ருத்ரமாதேவி ராணியாக நடித்து உள்ளார்.

அல்லு அர்ஜூன், ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரினா, திரேஷா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் துவக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பின்னணி பேசியுள்ளார்.

பாகுபலி படத்தில் அனுஷ்கா  சில நிமிடங்களே திரையில் தோன்றியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களை மகிழ்விக்க வாள் ஏந்தி போர் புரிந்த சரித்திர நாயகியாக அனுஷ்கா திரையில் விருந்து படைக்கவுள்ளார்.


Post your comment





Related News
புலியை விரட்டிய ருத்ரமாதேவி!
ருத்ரமாதேவியின் முதல் நாள் வசூல் முன்னணி நடிகர்களையே பிரமிக்க வைத்த அனுஷ்கா
மூன்று வருடங்களுக்கு பிறகே திருமணம்: அனுஷ்கா அதிரடி
மீண்டும் தீபாவளிக்கு தள்ளிப் போகும் ருத்ரமாதேவி?
ருத்ரம்மா தேவி நினைத்து ஏமாறும் அனுஷ்கா!
மீண்டும் தள்ளிவைப்பு; ருத்ரமாதேவி
நான் சினிமா மகாராணி: அனுஷ்கா பெருமிதம்
அந்தப்புரத்தில் அழகு தேவதைகள்...!
செப்டம்பரில் திரைக்கு வரும் ருத்ரமாதேவி
ருத்ரமாதேவி இளவரசி முக்தாம்பா...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions