ருத்ரமாதேவி நகைகளை வாங்கியது சென்னை நகை கடை: விற்பனை செய்ய திட்டம்

Bookmark and Share

ருத்ரமாதேவி நகைகளை வாங்கியது சென்னை நகை கடை: விற்பனை செய்ய திட்டம்

அனுஷ்கா நடித்து வரும் பிரமாண்ட தெலுங்கு படம் ருத்ரமாதேவி. இது 1259ம் ஆண்டு முதல் 1295ம் ஆண்டுவரை ஆந்திராவில் உள்ள வாரங்கல்லை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த காகதீய ராணி ருத்ரமாதேவியின் வரலாற்றுக் கதை. தமிழ்நாட்டு ராணி மங்கம்மாள் மாதிரி ஆந்திரத்து மங்கம்மா இவர்.

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ருத்ரமாதேவியாக நடித்த அனுஷ்கா நிஜமான தங்க நகைகளை அணிந்து நடித்தார். ஒவ்வொரு முறையும் ஒன்று முதல் 3 கிலோ வரையிலான நகைகளை அணிந்து நடித்தார். 12ம் நூற்றாண்டு காலத்தில் வரையப்பட்ட ராணி ருத்ரமாதேவியின் ஓவியம், அவரது சிலைகள் ஆகியவற்றைப் பார்த்து அதன்படி நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட நகைகள் அவை.  

தற்போது படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் இந்த நகைகளை சென்னையில் உள்ள என்.ஏ.சி. தங்க மாளிகை என்ற நகைக்கடை வாங்கி உள்ளது. அதனை படம் வெளியானதும் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.


Post your comment





Related News
வசூல் வேட்டை நடத்தும் ருத்ரமாதேவி!
மீண்டும் தீபாவளிக்கு தள்ளிப் போகும் ருத்ரமாதேவி?
ருத்ரமாதேவியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ருத்ரமாதேவி படத்தில் கம்பீரமாக தோன்றும் அல்லு அர்ஜுன்
ருத்ரமாதேவியின் மூலம் அனுஷ்கா புது அவதாரம்
\'ருத்ரமாதேவி\' ஜுன் 26 ரிலீஸ்...!
ருத்ரமாதேவி படத்தில் பின்னணி பேசும் ராணா
மே இறுதியில் ருத்ரமா தேவி
ருத்ரமாதேவி காதல் காவியமும் கூட...! - இயக்குநர்
ருத்ரமாதேவி சம்மருக்கு ரிலீஸ் இல்லை...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions