ருத்ரமாதேவி படத்தில் பின்னணி பேசும் ராணா

Bookmark and Share

ருத்ரமாதேவி படத்தில் பின்னணி பேசும் ராணா

மலையாள திரைப்படமான பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடித்து வரும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் பாகுபலி, ருத்ரமாதேவி  போன்ற சரித்திர படங்களிலும்   நடித்து வருகின்றார்.

இதில் ருத்ரமாதேவி படத்தில் தனக்கான பின்னணி பேசும் பணிகளில் தற்போது ராணா ஈடுபட்டு வருகின்றாராம். 13 ஆம் நூற்றாண்டு காகதீய வம்ச தெலுங்கு ராணியான ருத்ரமாதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி வரும் ருத்ரமாதேவி படத்தில் நடிகை அனுஷ்கா, ருத்ரமாதேவி ராணியாக நடித்து உள்ளார்.

இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரினா திரேஷா போன்றோரும் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைத்து உள்ள இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் உருவாக்கி வருகின்றது.

இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதகதியில் நடைபெறுவதால் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரும்  என எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
ருத்ரமாதேவியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ருத்ரமாதேவி படத்தில் கம்பீரமாக தோன்றும் அல்லு அர்ஜுன்
ருத்ரமாதேவியின் மூலம் அனுஷ்கா புது அவதாரம்
மே இறுதியில் ருத்ரமா தேவி
ருத்ரமாதேவி காதல் காவியமும் கூட...! - இயக்குநர்
ருத்ரமாதேவி சம்மருக்கு ரிலீஸ் இல்லை...!
ருத்ரமாதேவி படத்துக்கு வாழ்த்து தெரிவித்த மெகா பவர்ஸ்டார்
சர்ச்சையில் அனுஷ்காவின் ருத்ரமா தேவி: வரி விலக்கு கிடைப்பதில் சிக்கல்
ருத்ரமாதேவி - நித்யா மேனன் அம்மாவாக அனுஷ்கா ?
தவணை முறையில் பாடல்கள் வெளியீடு; இது ருத்ரமாதேவி ஸ்பெஷல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions