
தெலுங்கில் அனுஷ்கா நடிக்க, குணசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் ருத்ரமா தேவி படத்தின் கதை, ஒரு நிஜ வீராங்கனை, அரசியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டது.
யார் இந்த ருத்ரமா தேவி? அவர் செய்த சாதனை என்ன? வடக்கில் ரஸியா சுல்தான் என்ற ஒரு ராணி இருந்தது நினைவிருக்கலாம். அவருக்குப் பிறகு இந்தியாவில் குறிப்பிடத்தக்க பெண்ணரசியாகத் திகழ்ந்தவர்தான் ருத்ரமா தேவி.
13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய, சோழர்கள் காலத்தில், 30 ஆண்டுகள் தென்னகத்தை ஆண்டவர் ராணி ருத்ரமா தேவி. காகதீய வம்சத்தைச் சேர்ந்த இவர் 14 வயதில் அரியணை ஏறினார்.
1259 முதல் 1289 வரை தற்போதைய தெலங்கானா மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளை ஆண்டார். இவரது ஆட்சிக் காலத்தில்தான் ஏராளமான குளங்கள் அந்தப் பகுதிகளில் வெட்டப்பட்டு, நீரைத் தேக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
தன் நாட்டு மக்களுக்கு பல நலத் திட்டங்களையும் அமல்படுத்தியுள்ளார். குறிப்பாக விவசாயிகள் மீது வரிச்சுமை இல்லாமல் பார்த்துக் கொண்டாராம். அந்நாட்களில் பல மன்னர்கள் படையெடுத்து தொல்லை தந்தபோதும், தனது போர் திறத்தாலும் திறமையான படையின் உதவியுடனும் 30 ஆண்டுகாலம் ஆட்சியைத் தக்க வைத்துள்ளார் இந்த ராணி.
ருத்ரமா தேவிருத்ரமா தேவியின் ஆட்சி, அவர் இறப்பு குறித்த ஒரு கல்வெட்டு சந்துபட்ல கிராமத்தில் கண்டெடுக்கப்படும் வரை, அவர் குறித்த ஆதாரப்பூர்வ தகவல் யாருக்கும் தெரியாமல் இருந்தது.
ருத்ரமா தேவி இறந்த நாள் நவம்பர் 27, 1289 என்று அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்று ஆதாரங்களை முழுமையாக வைத்தே இந்தப் படத்தை உருவாக்கி வருகிறாராம் இயக்குநர் குணசேகர்.
Post your comment