ருத்ரமாதேவி - நித்யா மேனன் அம்மாவாக அனுஷ்கா ?

Bookmark and Share

ருத்ரமாதேவி - நித்யா மேனன் அம்மாவாக அனுஷ்கா ?

தெலுங்குத் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம் 'ருத்ரமாதேவி'. தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் குணசேகர் இயக்கத்தில், அனுஷ்கா 'ருத்ரமாதேவி' யாக நடிக்கும் இந்தப் படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 'ருத்ரமாதேவி' படத்தில் அனுஷ்கா மகாராணியாக நடித்திருந்தாலும் நித்யா மேனனுக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறாராம்.

இந்த ஆச்சரியத் தகவல் நேற்று டோலிவுட்டில் பரவியுள்ளது. அந்தக் காலத்தில் எல்லாம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்வதால் நித்யா மேனன் போன்ற இளம் நடிகைக்கு அனுஷ்கா அம்மாவாக நடிப்பதும் பொருத்தமாகவே இருக்கும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக அந்தப்புரத்தில் இருக்கும் அனுஷ்கா, நித்யா மேனன், கேத்தரின் தெரேசா ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன. போகப் போக இந்தப் படம் பற்றிய பல ஆச்சரியத் தகவல்கள் வெளியாகும் என்கிறார்கள். 


Post your comment





Related News
ருத்ரமாதேவியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ருத்ரமாதேவியின் மூலம் அனுஷ்கா புது அவதாரம்
மே இறுதியில் ருத்ரமா தேவி
ருத்ரமாதேவி காதல் காவியமும் கூட...! - இயக்குநர்
ருத்ரமாதேவியின் ஆடியோ வாரங்கல் கோட்டையில் ரிலீஸ்
\'ருத்ரமாதேவி\' எனக்குப் பெருமை - அனுஷ்கா
ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா பயன்படுத்திய நகைகள் விற்பனைக்கு வருகிறது
ருத்ரமாதேவி யின் சாட்டிலைட் உரிமை ரூ.8.5 கோடி
அனுஷ்கா நடிக்கும் \'ருத்ரமாதேவி\' ரிலீஸ் தள்ளிவைப்பு...
அனுஷ்காவின் ருத்ரம்மா தேவி தமிழுக்கு வருகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions