ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா பயன்படுத்திய நகைகள் விற்பனைக்கு வருகிறது

Bookmark and Share

ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா பயன்படுத்திய நகைகள் விற்பனைக்கு வருகிறது

13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலத்தில் அண்டை மாநிலத்தில் ஆணாதிக்கம் மிக்க காலத்தில் 40 வருடங்கள் தன்னகரில்லா அரசியாக நாட்டை ஆண்டு வந்த ‘ருத்ரமா தேவி’யின் கதையை மையமாக வைத்து ‘ருத்ரமா தேவி’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இதில் அனுஷ்கா அந்த ருத்ரமாதேவி அரசியாகவே வாழ்ந்துள்ளார்.

தெலுங்கு பட உலகில் வெற்றிப்பட இயக்குனராக பவனி வரும் குணசேகர் மாபெரும் பொருட்செலவில் இயக்கி வருகிறார். ‘அருந்ததி’ படத்தில் அருந்ததியாக வாழ்ந்து காட்டிய அனுஷ்கா இதில் வீறுகொண்ட வீரமங்கையாக அமர்க்களமாக நடித்து வருகிறார். மேலும் இதில் அல்லு அர்ஜூன், ராணா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், சுமன், விஜயகுமார், ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்தரின் தெரேசா, ஹம்சா நந்தினி, அதிதி செங்கப்பா என முன்னணி நட்சத்திரங்களும் பங்குபெறுகிறார்கள்.

ஒரிசாவில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இப்படத்திற்காக எடுக்கப்பட்ட போர்க்களக் காட்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான துணை நடிகர்கள் பங்குகொள்ள பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளனர். அரண்மனை, தர்பார், பிரம்மாண்டமான கோவில், மாபெரும் கடைவீதி, குளம் என 16-க்கும் மேலான அரங்கங்களை தோட்டாதரணி அமைத்து கொடுத்துள்ளார்.

முழுக்க முழுக்க ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களின் ஈடுபாட்டோடு 3 டைமன்சன் வேலைகள் நடைபெறும் இதில் 110-க்கும் மேலான கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பலகோடிகள் செலவு செய்துள்ளனர். இந்த படத்திற்காக சென்னையில் உள்ள என்.ஏ.சி. தங்க மாளிகையில் ஐந்து கோடி ரூபாய் செலவில் ருத்ரமாதேவிக்காக தங்க ஆபரணங்கள் கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த ருத்ரமாதேவி நகைகள் என்.ஏ.சி., தங்க மாளிகையில் விற்பனைக்கும் வரவுள்ளது.

கலையை தோட்டாதரணியும் சண்டை பயிற்சியை பீட்டர் ஹெய்னும், நான்கு முறை தேசிய விருது பெற்ற நீட்டாலூலா உடையலங்காரத்தையும் ராஜூ சுந்தரம், பிருந்தா இருவரும் நடனப் பயிற்சியையும் அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவையும், வசனம் பாடல்களை பா.விஜய்யும், இசையை இளையராஜாவும், படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத்தும் கவனிக்கின்றனர்.

கதை, திரைக்கதை எழுதி குணசேகர் இயக்கும் ‘ருத்ரமா தேவி’ படத்தை என்.ராமசாமி தனது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து கோடைக்கால கொண்டாட்டமாக படத்தை திரையிட முனைப்போடு செயலாற்றி வருகிறார். 


Post your comment

Related News
ருத்ரமாதேவியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ருத்ரமாதேவியின் மூலம் அனுஷ்கா புது அவதாரம்
மே இறுதியில் ருத்ரமா தேவி
ருத்ரமாதேவி காதல் காவியமும் கூட...! - இயக்குநர்
ருத்ரமாதேவி - நித்யா மேனன் அம்மாவாக அனுஷ்கா ?
ருத்ரமாதேவியின் ஆடியோ வாரங்கல் கோட்டையில் ரிலீஸ்
\'ருத்ரமாதேவி\' எனக்குப் பெருமை - அனுஷ்கா
ருத்ரமாதேவி யின் சாட்டிலைட் உரிமை ரூ.8.5 கோடி
அனுஷ்கா நடிக்கும் \'ருத்ரமாதேவி\' ரிலீஸ் தள்ளிவைப்பு...
அனுஷ்காவின் ருத்ரம்மா தேவி தமிழுக்கு வருகிறது
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions