ருத்ரமாதேவியின் மூலம் அனுஷ்கா புது அவதாரம்

Bookmark and Share

ருத்ரமாதேவியின் மூலம் அனுஷ்கா புது அவதாரம்

தற்போது நடிகைகளும் ஹீரோக்களுக்கு இணையாக பெரிய தொகையை சம்பளமாக பெறுகின்றனர். அவர்களின் நடிப்புக்கும், திறமைக்கும் ஏற்ப சம்பளம் கிடைக்கின்றது.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ருத்ரமாதேவியில் நடிக்கும் பிரபல நடிகையான அனுஷ்காவும் அந்த படத்தின் ஒரு பார்ட்னர் என்று கூறப்படுகின்றது. இந்த படத்தை தயாரித்து, இயக்கி வரும் குணசேகர் நடிகை அனுஷ்காவுக்கு சம்பளம் எதுவும் தரவில்லையாம்.

மாறாக இந்த படத்தின் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அல்லது இந்த படத்தின் தமிழ் விநியோக உரிமை கொடுக்க இருக்கிறாராம். இந்த நடவடிக்கை ஒரு நடிகைக்கும் சரி, இயக்குனருக்கும் சரி மிக புதுமையான ஒன்றாகும்.

இந்த படம் மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்டு இருப்பதால் படம் வெற்றி பெற்றால் அனைவருக்கும் நல்ல லாபம் தான். இல்லை என்றால் நெருக்கடி தான். நடிகை அனுஷ்காவை பொறுத்தமட்டில் நல்ல நிலைமையில் இருக்கிறார்.

அவருக்கு சம்பளம் ஒரு பொருட்டாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது. அவர் ருத்ரமாதேவியின் தெலுங்கு பதிப்பு வெளியாகும் முன்பாக அதன் தமிழ் பதிப்பை வெளியிட்டால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த புதிய யுக்தி வெற்றி அடைந்தால் மற்றவர்களும் இதனை பின்பற்ற வாய்ப்புகள் அதிகம். எனினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் இல்லை. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

அனுஷ்கா, ராணா மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பது நினைவிருக்கலாம். இந்த படத்தை இயக்குனர் குணசேகர், குணா ஆர்ட்ஸ் என்ற தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிப்பது நினைவிருக்கலாம்.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions