
விஜயசேதுபதி- இனிகோ பிரபாகரன் நடித்த ரம்மி படத்தை இயக்கியவர் கே.பாலகிருஷ்ணன். 2014ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.
அவரது இசையில் உருவான கூட மேல கூட வச்சி என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது .ஆனபோதும், அதையடுத்து தனது அடுத்த படத்தை உடனடியாக தொடங்காத பாலகிருஷ்ணன், பல படங்களில் நடித்து வந்தார்.
அதில் சிகரம் தொடு உள்ளிட்ட சில படங்களில் அவரது கேரக்டர் ஓரளவு பேசப்பட்டதால், இப்போது தொடர்ந்து நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில், தற்போது தனது இரண்டாவது படவேலைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
அப்படத்தில் சத்யராஜ், தம்பி ராமைய்யா உள்ளிட்ட சில பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்க, கோலிசோடா படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம் ஆகியோரும் நடிக்கிறார்களாம். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்குகிறதாம்.
Post your comment
Related News | |
![]() |