இப்படியும் ஒரு நடிகை

Bookmark and Share

இப்படியும் ஒரு நடிகை

திருதிரு துறுதுறு படத்தின் மூலம் அறிமுகமான பெங்களூர் பெண் ரூபா மஞ்சரி அடிப்படையில் தமிழ் பெண் இல்லை. ஆனால் தமிழில் நன்றாக பேசுகிறவர். இவர் நடித்த படம் மிகவும் குறைவு.

தமிழில் இவர் நடித்த திருதிரு துறுதுறு, நான், யாமிருக்க பயமே மூன்று படங்களும் ஹிட் படங்கள்தான் மலையாளத்தில் நடித்த மல்லு சிங்கும் ஹிட் படம். ஆனால் அந்த வெற்றிகளை தலைக்கு ஏற்றிக் கொள்ளாத எளிமையான நடிகை.

தற்போது அவர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் சிவப்பு.  இதில் அவர் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அகதி பெண்ணாக நடிக்கிறார். அவரது சுருள் முடி இலங்கை பெண்களைப் போல இருப்பதாலேயே அந்த கேரக்டருக்கு தேர்வு செய்யப்பட்டார்.

சிவப்பு படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் ஒரு கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தில்தான் நடந்தது.  40 நாட்களும் டல் மேக்அப்பில் நிஜமான சிமெண்டு மூட்டைகள் சுமந்து, செங்கல் சுமந்து செருப்பு அணியால் நடந்து, ஒரு கட்டிடத்தொழிலாளியாகவே வாழ்ந்து நடித்திருக்கிறார் ரூபா மஞ்சரி.

அப்படி கஷ்டப்பட்டு நடித்த படம் தயாரிப்பாளரின் மரணத்தால் தடைபட்டு நின்றிருந்த நேரத்தில் படத்தை வெளிக்கொண்டு வர தன்னால் முடிந்த உதவியாக தனது சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க முன்வந்தாராம்.

இத்தனைக்கும் அவருக்கு சில லட்சங்கள்தான் சம்பளமாம். ஆனால் பாரம்பரியமிக்க தயாரிப்பு தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சமீபத்தில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தபோது அதற்கு தொகுப்பாளர் யாரையும் நியமிக்கவில்லை.

அப்படி நியமித்தால் அவருக்கு 20 ஆயிரம் சம்பளம் கொடுக்க வேண்டும் அதனால் நானே தொகுத்து தருகிறேன் என்று தொகுப்பாளினியாகவும் வேலை செய்தார். ஒரு பட வெற்றியிலேயே வானத்தில் மிதக்கும் நடிகைகளுக்கு மத்தியில் மூன்று வெற்றிப்படங்களில் நடித்தும் எளிமையாக இருக்கும் ரூபா மஞ்சரி நிச்சயம் ஆச்சர்யப்பட வைக்கும் நடிகைதான்.


Post your comment





Related News
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
விஜய்யின் அடுத்த படம் இவரோடா? பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் மாஸ் கூட்டணி
இராணுவ உடையில் வலைதளத்தில் கலக்கும் கமல்ஹாசன்
மெர்சல்-ல இதெல்லாம் இருக்காது - எடிட்டர் ரூபன் ஓபன் டாக்.!
படத்துல நடிக்காம ஸ்டேஜ்ல நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.. போட்டுத்தாக்கும் கரு பழனியப்பன்
சிவகார்த்திகேயன் செய்வது ட்ராமா- வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
திருப்பதி பிரதர்ஸுக்கு புதுப்படம் நடித்துத் தரும் கமல்
ரூபா மஞ்சரியின் மனசு வலிக்கிறதாம்!
ஏப்ரல் மாதம் திருப்பதி பிரதர்ஸ் மாதம்
தியேட்டர்களுக்காக முட்டி மோதும் தயாரிப்பாளர்கள்... இன்று ஒரே நாளில் 11 படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions