முழு நேர நடிகர் ஆனார் ஆர்.வி.உதயகுமார்

Bookmark and Share

முழு நேர நடிகர் ஆனார் ஆர்.வி.உதயகுமார்

ரஜினிக்கு எஜமான், விஜயகாந்துக்கு சின்னகவுண்டர், கமலஹாசனுக்கு சிங்காரவேலன், கார்த்திக்கிற்கு கிழக்கு வாசல், பொன்னுமணி, நந்தவன தேரு, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆர்.வி.உதயகுமார்.

சின்னராமசாமி பெரிய ராமசாமி என்ற காமெடி படத்தை இயக்கி நடித்தார். அந்த படம் வெளிவரவில்லை. கடைசியாக கற்க கடற  என்ற படத்தை இயக்கினார். இதில்தான் லட்சுமிராய் அறிமுகமானார்.  

கடந்த 15 வருடங்களாக எந்த படமும் இயக்காத உதயகுமார். அ.தி.மு.வில் இணைந்து அரசியல் பணியாற்றினார். இடையிடையே சில படங்களில் ஓரிரு காட்சிகளில் சிறப்பு தோற்றமாக நடித்து வந்த ஆர்.வி.உதயகுமார் தற்போது முழுநேர நடிகராகிவிட்டார்.

பாண்டிராஜ் இயக்கதில் சூர்யா நடிக்கும் ஹைக்கூ படத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக நடிக்கிறார், பாபி சிம்ஹா நடிக்கும் பாம்புசட்டை படத்தில் வில்லன்களில் ஒருவராக நடிக்கிறார், இதுதவிர கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா என்ற காமெடி படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இதுதவிர மேலும் பெயரிடப்படாத 3 படத்தில் நடிக்கிறார்.  தொடர்ந்து கேரக்டர் ரோல்களிலும், வில்லனாகவும் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

 


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions