சார்ட்டிலைட் விற்பனை குறித்து மார்ச்-30ல் புதிய முடிவு! -எஸ்.தாணு

Bookmark and Share

சார்ட்டிலைட் விற்பனை குறித்து மார்ச்-30ல் புதிய முடிவு! -எஸ்.தாணு

முன்பெல்லாம் படங்கள் வெளியாவதற்கு முன்பே சாட்டிலைட் விற்பனையும் நடந்து விடும்.

ஆனால், இப்போது அப்படியல்ல, படங்களின் வெற்றியைப் பொறுத்துதான் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பெரிய ஹீரோக்களின் படங்களை முன்பே வாங்கிக்கொள்ளும் சேனல் உரிமையாளர்கள், சிறிய படங்களை கண்டுகொள்வதே இல்லை.

பல படங்களை அவர்கள் வாங்குவதுகூட இல்லை. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள், புதுமுக நடிகர்களின் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை சாட்டிலைட்களுக்கு விற்பனை செய்ய முடியாமல் தவித்துக்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.தாணு இந்த பிரச்சினைக்கு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.</p><br />அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தமிழ்த்திரையுலகம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

அதனால் நான் தலைவரானதில் இருந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். குறிப்பாக, சின்ன படங்களை சேனல்கள் வாங்குவது தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 30 படங்கள் விற்பனை ஆகாமல் உள்ளது.

ஆனால் வருகிற மார்ச் 30-ந்தேதி தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு நடக்கிறது. அப்போது சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

அதையடுத்து, சிறிய படங்களின் சார்ட்டிலைட் உரிமையை சேனல்காரர்கள் வாங்குவதற்கான சூழ்நிலை உருவாகி விடும் என்கிறார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions