ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார் எஸ்.ஏ.சி.

Bookmark and Share

ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார் எஸ்.ஏ.சி.

அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘டூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தின் வெற்றி, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரை முழுநேர நாயகனாக மாற்றி உள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் ஏ.வெங்கடேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களிடம் கூறிய ஒரு கதை மிகவும் பிடித்துப் போனதால், அப்படத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி. அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

இது தவிர இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படம், இந்தி திரையுலகில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற Baghban எனும் படத்தின் கதையை தழுவியது என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தை விக்னேஷ், கிருஷ்ணா எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இந்த படத்திற்கு ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions