டூரிங் டாக்கீஸ் படத்தை அமிதாப்பை வைத்து இயக்குகிறாராம் எஸ்ஏசி... தாணு தயாரிக்கிறார்!

Bookmark and Share

டூரிங் டாக்கீஸ் படத்தை அமிதாப்பை வைத்து இயக்குகிறாராம் எஸ்ஏசி... தாணு தயாரிக்கிறார்!

மூன்று இளம் நாயகிகளுடன் தான் நடித்துள்ள டூரிங் டாக்கீஸ் படத்தை, இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து ரீமேக் செய்யப் போகிறாராம் எஸ்ஏ சந்திரசேகரன். இந்தப் படத்தை கலைப்புலி தாணுவே தயாரிக்கிறார்.

இன்று நடந்த டூரிங் டாக்கீஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது இதனைத் தெரிவித்தார் கலைப்புலி தாணு.படத்தின் ட்ரைலரை வெளியிட்ட பிறகு கலைப்புலி தாணு கூறுகையில், "இந்தப் படம் எஸ் ஏ சந்திரசேகரனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக அமையும். தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பெறும்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். டூரிங் டாக்கீஸ் படத்தை இந்தியில் அமிதாப்பச்சனை வைத்து இயக்கப் போகிறார் எஸ் ஏ சந்திரசேகரன். அந்தப் படத்தை நானே தயாரிக்கப் போகிறேன்," என்றார்.

டூரிங் டாக்கீஸ் படத்தில் 75 வயதில் இளம் பெண்ணை காதலிப்பவராக நடித்துள்ளாராம் எஸ்ஏ சந்திரசேகரன். அந்த வேடத்தில்தான் அமிதாப்பை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.


Post your comment





Related News
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions