சட்டம் என் பையில்: எஸ்.ஏ.சி பாணியில் படம் இயக்கும் உதவியாளர்

Bookmark and Share

சட்டம் என் பையில்: எஸ்.ஏ.சி பாணியில் படம் இயக்கும் உதவியாளர்

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சட்டத்தை வைத்து பல படங்களை இயக்கினார். சட்டம்  என்  கையில், சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி, இப்படி பல படங்களை இயக்கினார். தற்போது அவரது உதவியாளர் ராம செல்வ கருப்பையா என்பவர் எஸ்.ஏ.சந்திரசேகர் பாணியில் சட்டம் என் பையில் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

வி.பி.ஆர், விக்ரம், ஹேமா, ராம்ஜித், ரீத்து என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். அமுதபாரதி இசை அமைக்கிறார். "என் குரு எஸ்.ஏ.சியிடம்தான் சினிமா கற்றேன். அவரிடம் சினிமா கற்றவர்களில் ஷங்கர் உள்ளிட்ட யாரும் அவர் பாணியில் படம் இயக்கவில்லை. முதன் முறையாக நான் சட்டம் என் பையில் என்ற படத்தை இயக்குகிறேன்.

ஒரு கொலை வழக்கை இரண்டு வழக்கறிஞர்கள் கையாளுகிறார்கள். இதற்காக அவர்கள் போடும் திட்டங்களும், திருப்பங்களும்தான் கதை. சட்டத்தை வைத்து என் குரு இயக்கிய அத்தனை படங்களும் வெற்றி பெற்றிருக்கிறது. அதுபோல இதுவும் வெற்றி பெறும்" என்கிறார் இயக்குனர் ராம செல்வ கருப்பையா.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions