விஜயின் அப்பாவிடம் பணியாற்றியவர் இப்போது இயக்குனராகிறார் ! யார் தெரியுமா

Bookmark and Share

விஜயின் அப்பாவிடம் பணியாற்றியவர் இப்போது இயக்குனராகிறார் ! யார் தெரியுமா

இளையதளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பல நல்ல படங்களை சினிமாவில் கொடுத்தவர். இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பரணி.

இவர் உதிரிபூக்கள், முள்ளும் மலரும், முதல் மரியாதை, அழகி, பருத்திவீரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர்.

இப்போது இசையமைப்பாளர்களும் நடிகராகி வரும் நேரத்தில் அவர் இயக்குனராக அவதாரம் செய்கிறார். பரணி தற்போது ஒண்டிக்கட்ட என்னும் படம் எடுத்து வருகிறார்.

எஸ்.ஏ.சாரிடம் பணியாற்றிய அனுபவத்தை கொண்டு இப்போது தைரியமாக படம் எடுக்கிறேன். இப்படத்தில் விக்ரம் ஜெகதீஷ், நேகா, சிங்கம் புலி, செண்ட்ராயன், லொள்ளு சபா சுவாமி நாதன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இது தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒருவரின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அவரே இசையமைத்த இப்படத்தின் கிளைமாக்ஸை பார்த்துவிட்டு அவரே கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.

கோடைவிடுமுறைக்காக வெளிவரும் இப்படம் அனைவரையும் பேசவைக்கும் என்று சொல்கிறார் பரணி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions