வெளிநாடுகளில் படமாகும் சாஹசம் படபாடல்கள்

Bookmark and Share

வெளிநாடுகளில் படமாகும் சாஹசம் படபாடல்கள்

நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன் தயாரிப்பில், அருண் ராஜ் வர்மா இயக்கத்தில், பிரசாந்த் நடித்து உருவாகும் சாஹசம் படத்தின் பாடல்கள், ஜப்பான் மற்றும் மலேசியா நாடுகளில் படமாக்கப்பட உள்ளது.

பிரசாந்த், அமெண்டா கலக்கல் நடனத்தில் உருவாக உள்ள ஷயாங் கு எனத்துவங்கும் பாடலின் படப்பிடிப்பு, வரும் 16ம் தேதி முதல் , மலேசியா நாட்டின் பல்வேறு நகரங்களில், 10 நாட்களுக்கு மேல் நடைபெற உள்ளது.

அதேபோல், மோஹித் சவுகான் இனிய குரலில் உருவாகியுள்ள ஆங்கிரி பேர்ட் படப்பாடல், இம்மாதம் 24ம் தேதி முதல், ஜப்பான் நாட்டில் பல்வேறு நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions