ஷகீலாவின் காலி இடத்தை நிரப்பும் சாரிகா!

Bookmark and Share

 ஷகீலாவின் காலி இடத்தை நிரப்பும் சாரிகா!

மேதை, அரும்பு மீசை குறும்பு பார்வை உள்பட சில படங்களில் நடித்தவர் சாரிகா. இவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகளாகியும் பின்தங்கியே இருக்கிறார். அதோடு தனது உடம்பையும் பராமரிக்காமல் விட்டு விட்டதால் இப்போது ஊதிப்பெருத்துப்போய் இருக்கிறார் சாரிகா.

இந்த நிலையில், நிராயுதம் படத்துக்கு கவர்ச்சிகரமான கதாநாயகி தேடிவந்த இயக்குனர் ராஜதுரையின் கண்ணில் சாரிகா பட, உடனே அவரை ஒப்பந்தம் செய்து அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

அதில் வில்லனின் கையில் சிக்கும் சாரிகாவின் உடைகளை அவர் கிழித்தெறிந்து விடுவாராம். அதனால், நிர்வாணமாக்கப்படும் சாரிகா, சில பேப்பர்களை தனது உடம்பில் கட்டிக்கொண்டுதான் அங்கிருந்து தப்பித்து வருவாராம்.

இந்த கேரக்டரில் படுகவர்ச்சியாக நடித்துள்ளார் சாரிகா. இந்த சேதியறிந்து ஷகீலாவை மனதில் கொண்டு கிளாமர் கதைகளை ரெடி பண்ணி வைத்திருந்த சில ஆபாசப்பட இயக்குனர்கள் சாரிகாவை முற்றுகையிட்டுள்ளனர்.

ஏற்கனவே சரியான படவாய்ப்பு இல்லாமல் சில ஆண்டுகளாக தடுமாறிக்கொண்டு வந்த சாரிகா, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக தேடி வந்த அத்தனை கவர்ச்சி படங்களுக்கும் கால்சீட் கொடுத்து விட்டாராம்.  ஆக, இப்போது ஆபாச நடிகை ஷகிலா கேரக்டர் நடிகையாகி விட்டதால், அவர் விட்டுச்சென்ற காலி இடத்தை தான் நிரப்ப கோதாவில் குதிக்கிறார் சாரிகா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions