சாட்டை யுவனின் டீலிங்!

Bookmark and Share

சாட்டை யுவனின் டீலிங்!

பாசக்கார நண்பர்கள், சாட்டை, கீரிப்புள்ள, கமரக்கட்டு என பல படங்களில் நடித்திருப்பவர் யுவன். இவரை சினிமாவில் வளர்த்து விடுவதற்காக ஆரம்பத்தில் அவரது தந்தையான பெரோஸ்கான் சில படங்களை தயாரித்து இயக்கினார்.

ஆனால், அப்படி அவர் தயாரித்த படங்கள் எல்லாமே கையை கடித்து விட்டதால் இப்போது யாராவது டைரக்டர்கள் யுவனுக்கு கதை சொல்லிவிட்டு இந்த படத்துக்கு நீங்களே பைனான்ஸ் செய்யுங்கள் என்று சொன்னால், அப்படி எந்த ஐடியாவும் இல்லை என்று நழுவிக்கொள்கிறார்.

ஆனபோதும், யுவனிடம் கதை சொல்ல வரும் பெரும்பாலானவர்கள் பைனான்ஸ் உதவியே கேட்பதால். இப்போது ஒரு முடிவு செய்திருக்கிறார் பெரோஸ்கான்.  அதாவது, மகனின் சினிமா விசயங்களில் அவர் இப்போது தலையிடுவதே இல்லை.

தன்னை பார்த்தால்தானே பைனான்ஸ் கேட்பார்கள். அவர்கள் கண்ணில் தென்படவே இல்லை என்றால் எந்த பிரச்சினையும் இல்லையே என்று எஸ்கேப்பாகி விடுகிறார். அதன்காரணமாக, இப்போது கதை கேட்பது, கால்சீட் கொடுப்பது, சம்பளம் பேசுவது என அனைத்து விசயங்களையும் யுவனிடமே விட்டு விட்டார்.

அந்த வகையில், இப்போது யார் கதை சொல்லச்சென்றாலும் தான் மட்டும் கதை கேட்கும் யுவன், யாராவது அப்பா இல்லையா? என்று கேட்டால், பிஸ்னஸ் விசயமாக வெளியூர் சென்றிருக்கிறார் என்று சொல்லி தானே அனைத்து விசயங்களையும் டீல் பண்ணி வருகிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions