கதாபாத்திரத்துக்கு பதிலாக மகள் பெயரை சொன்ன கமல்: ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் ருசிகரம்

Bookmark and Share

கதாபாத்திரத்துக்கு பதிலாக மகள் பெயரை சொன்ன கமல்: ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் ருசிகரம்

கமல் தயாரித்து இயக்கி நடித்து வரும் புதிய படம் ‘சபாஷ் நாயுடு’. இப்படத்தில் ஸ்ருதிஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கமலின் மகளாகவே அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து கமலும் இப்படத்தை தயாரித்து வருகிறார். 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. நவம்பரில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர். அமெரிக்கா படப்பிடிப்பின்போது ஸ்ருதியை கமல் பெயர் சொல்லி அழைப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அப்போது ஸ்ருதியின் கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி அழைப்பதற்கு பதிலாக ஸ்ருதியின் உண்மையான பெயரையே சொல்லி கமல் கூப்பிட்டு இருக்கிறார். இதனால் அந்த காட்சியை மீண்டும் படமாக்கும்படி ஆகி இருக்கிறது.

“நடிப்பில் எவ்வளவு பெரிய அனுபவசாலியான அவரே வாய்தவறி இப்படி சொன்னது உண்மையாகவே என் இதயத்தை தொடும் அனுபவமாக இருந்தது” என்று அமெரிக்க படப்பிடிப்பின் போது நடந்த இந்த சம்பவத்தை இப்போது சொல்லி மகிழ்ந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions