'டிஆர்பி'காக என் வாழ்க்கையை அழித்துவிட்டது இந்த டிவி! வாணி ராணி சீரியல் நடிகை புகார்

Bookmark and Share

'டிஆர்பி'காக என் வாழ்க்கையை அழித்துவிட்டது இந்த டிவி! வாணி ராணி சீரியல் நடிகை புகார்

சமீபத்தில் வாணி ராணி சீரியல் நடிகை சபிதா ராய், ராதிகாவின் ராடன் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளருடன் கள்ளகாதல் பிரச்சனையால் நடு ரோட்டில் சண்டை போட்டதாக செய்தி வந்தது.

ஆனால் அது முற்றிலும் பொய் என நடிகை சபிதா ராய் விளக்கமளித்துள்ளார். அவர் எனக்கு தந்தை ஸ்தானத்தில் உள்ளவர் என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

எனது பெயர் சபிதா ராய். எனது அம்மா பெயர் பொள்ளாச்சி பிரேமா. ஏ.வி.எம் நிறுவனம், எஸ்.பி.முத்துராமன் சாரின் பல படங்களில் ரஜினி - கமல் சாரோடு நடித்துள்ளார். நானும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளேன்.

தற்போது 'க க க போ' படத்தில் நடித்துள்ளேன். படங்கள் தவிர்த்து விகடன் நிறுவனம் மற்றும் ராடன் நிறுவனம் தயாரித்த 18 நாடகங்களுக்கு மேலாகவும் நடித்துள்ளேன்.

'தாமரை', 'இளவரசி' மற்றும் தற்போது 'வாணி ராணி' நாடகத்தில் நடித்து வருகிறேன்.

'வாணி ராணி' நாடகத்தில் எனது அப்பா ஸ்தானத்தில் நிர்வாக தயாரிப்பாளர் சுகுமார் என்பவர் இருந்தார். அவருக்கு விபத்தில் காலில் அடிப்பட்டிருந்தது. அப்போது 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினேன். மனிதாபமான அடிப்படையில் அவரும் எனக்கு உதவியுள்ளார். ஆகையால் நானும் அவருக்கு உதவினேன்.

2 மாதங்களாக சுகுமார் சாரும் எனக்கு பணம் தரவில்லை. சம்பவத்தன்று என்ன நடந்தது என்றால், காலையிலிருந்து இப்போது வந்து தருகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

மாலையில் தொலைபேசியில், "மனைவி ஊரிலில்லை. ஆகையால் மகன்கள் மட்டும் தான் வீட்டில் உள்ளார்கள். நாங்களும் இரவு ஊருக்குச் செல்கிறேன். ஆகையால் என்னால் வந்து தர இயலாது. நீங்கள் வந்து வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார்.

எனக்கு சுகுமாருடைய வீடு அவ்வளவாக தெரியாது. அதனால் நண்பர்களுடன் சென்று, வீட்டிற்கு கீழேயே உட்கார்ந்துவிட்டேன். மேலே கூட நான் செல்லவில்லை. அப்போது சுகுமாரும், அவருடைய நண்பரும் வண்டியில் வந்து இறங்கினார்கள். ஏன் இங்கு வந்தாய் என்று கோபத்துடன் கேட்க, நானும் "நீங்களே தானே வரச் சொன்னீர்கள்" என்று கோபத்துடன் பதிலளித்தேன். வீட்டில் மனைவி இல்லை என்பதால் வீட்டுக்கு வந்து வாங்கி செல்லும்படி நீங்கள் தானே சொன்னீர்கள் என்று நான் பேச, எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

நான் அப்படிச் சொல்லவே இல்லை என்ற போது, அவருடன் வந்தவருந்தவரிடம் எனது தொலைபேசியைக் காட்டி அவர் தான் வரச் சொன்னார் என்று கூறி ஆதாரத்தைக் காட்டினேன். எனது கோபம் தாக்க முடியாமல், சத்தமாக பேசிய உடனே சுகுமார் என்னை அடித்து போனை புடிங்கினார். நானும் அவரை அடித்துவிட்டேன்.

இதற்கிடையே எங்களுக்கு இடையே நடந்த சண்டையை, சுகுமார் வீட்டுக்கு கீழே உள்ளவர் (பாலிமர் தொலைகாட்சியில் பணிபுரிபவர்) அவர் எங்களுடைய வாக்குவாதம் மற்றும் சண்டையை, எங்களுக்கு தெரியாமல் தொலைபேசியில் காட்சிப்படுத்தியுள்ளார். அவருக்கும் சுகுமாருக்கு ஏற்கனவே பகை இருந்துள்ளது.

அவர் தான் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறை வந்து எங்கள் இருவருக்கும் சமரசம் செய்து வைத்தார்கள்.

நான் வீட்டுக்கு வந்து இறங்குகிறேன். அதற்குள் எங்கள் இருவரையும் தவறாக சித்தரித்து பாலிமர் தொலைகாட்சியில் செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். எனக்கு பேரதிர்ச்சியாகி விட்டது. காவல்துறையில் எந்தவொரு புகாருமே பதிவாகவில்லை. டி.ஆர்.பிக்காக் அப்படியொரு செய்தியை பாலிமர் தொலைகாட்சி வெளியிட்டு எனது திரையுலக வாழ்வையே சிதைத்துவிட்டார்கள்.

பாலிமர் தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் "நான் தற்கொலை செய்து கொள்வேன்" என்று பேசியதற்கு "இனிமேல் போடவில்லை. நீங்கள் ஒரு பேட்டி கொடுங்கள் வெளியிடுகிறோம்" என்று சொல்கிறார்கள். அந்த வீடியோ பதிவில், முன்னால் - பின்னால் பேசியது எதையுமே வெளியிடாமல் "மனைவி இல்லை. வீட்டுக்கு வரச்சொல்லி காசு வாங்கிச் செல்ல சொன்னீர்களே" என்று பேசியதை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்.

யாரோ ஒருவர் செய்தியை எடுத்து கொடுத்ததிற்கு என்னுடைய வாழ்க்கையை வீணாக்கிவிட்டார்கள். எனது அப்பா வயது இருப்பவரோடு, கள்ளக்காதல் என செய்தி வெளியிட்டுவிட்டு இப்படி சொல்வதற்கு எப்படி தான் மனது வருகிறது என தெரியவில்லை. மேலும், தொலைக்காட்சியில் நிறுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு சமூகவலைத்தளத்தில் பரப்பிவிட்டார்கள். இதனால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். இதே மாதிரி வேறு எந்தவொரு பெண்ணுக்கும் நடைபெறக்கூடாது. இந்த செய்தியின் மூலமாக 2 குடும்பத்தின் வாழ்க்கையை சிதறடித்துவிட்டார்கள். 2 குடும்பத்தை சிதைத்து அப்படி என்ன டி.ஆர்.பி போட்டி என தெரியவில்லை. இப்பிரச்சினையால் பெண் நிறுவனரான ராதிகா சரத்குமார் என்னிடம் என்ன பிரச்சினை என்று கூடக் கேட்காமல் வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள்.

”இதனை நான் நடிகர் சங்கத்தில் முறையிட்டேன். தற்போது அவர்கள் தான் எனக்கு துணை நிற்கிறார்கள். ஒரு நாள் டி.ஆர்.பிக்காக எனது மொத்த வாழ்க்கையின் மீது கருப்பு புள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், இதனை தைரியமாக எதிர்கொள்வேன்” என கூறியுள்ளார்.


Post your comment

Related News
என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்
பண முதலைகளுக்கு வங்கி கடன், இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்.!
படத்தை பார்க்காமலேயே வழக்கு போடுவதா? இரும்புத்திரை இயக்குனர் விளக்கம்
குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா
ஹிந்திக்கு போகும் "பியார் பிரேமா காதல்"
யாரும் குடும்பத்தோடு வராதீங்க - இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர்
புதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்!
உடல் நலக்குறைவு காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதி
சாதனை இயக்குனரின் படைப்பில் உருவாகி உள்ள நாகேஷ் திரையரங்கம்.!
பரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் “கடமான்பாறை“
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions